கரூரில் ஆளுங்கட்சியான அதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் 7 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், புஞ்சை புகளூர் தோட்டக்குறிச்சி பேரூராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் பஞ்சாயத்துத் தலைவராகவும், உறுப்பினர்களில் 3 பேர் அதிமுக சார்பிலும், 3 பேர் திமுக சார்பிலும், தேமுதிக சார்பில் ஒருவரும், 7 பேர் சுயேட்சையாகவும் வெற்றி பெற்றனர்.
இவர்களில் 4 சுயேட்சை உறுப்பினர்கள் தேர்தல் முடிந்த அடுத்த நாளே ஆளுங்கட்சியான அதிமுகவில் சேர்ந்துவிட்டனர். இதனால் புஞ்சை புகளூர் பஞ்சாயத்தில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து 7 பேர், தேமுதிகவில் இருந்து ஒருவர், சுயேட்சிகள் 2 பேர் உட்பட மொத்தம் 10 கவுன்சிலர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
எதிர்கட்சியில் இருந்து தான் ஆளுங்கட்சிக்கு முக்கிய நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தாவுவது வழக்கம். இந்த நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் ஐக்கியமாகி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதிலும் கட்சி மாறிய அதிமுக கவுன்சிலர்களை பஸ்சில் அழைத்துச் சென்றால் அதற்குள் அவர்களை யாராவது மனம் மாற்றிவிடுவார்கள் என்பதால் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக