சேலம் மாவட்டம் சினப்பம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 32) இவர் ஆரூர் பட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.இவரிடம் தரமங்கலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் கந்தசாமியின் மகள் கவிதா வயது 19 என்பவர் ஆங்கில சிறப்பு பயிற்சிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
கவிதா தற்போது கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவை கல்லூரியிலிருந்து கவிதா காணாமல் போய்விட்டார்.
ஆரூர் பட்டி பள்ளிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர் கணேசனும் காணாமல் போய்விட்டார். இருவரையும் காணவில்லை என்று கவிதாவின் தந்தையார் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தாரமங்கலம் போலீசில் ஆஜரான கவிதா, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூட்டி சென்ற கணேசன் ஊட்டி கோவை, மேட்டுப்பாளையம் என்று பல இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு, என்னை லாட்ஜில் தங்கவைத்து பலவந்தப்படுத்தி உடலுறவு கொண்டார்.
இப்போது, தாரமங்கலத்துக்கு கூடிவந்து உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உன் பெற்றோர் வீட்டுக்கு செல் என்று கையை விரித்து விட்டார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் கணேசனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், கணேசனுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்றே திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவருக்கு குழந்ûதைகள் இல்லை. கோவையில் படித்துவரும் கவிதாவை சென்று பார்த்துவிட்டு தன்னுடைய தங்கைதான் என்று கூறி கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு பலமுறை வெளியில் கூட்டிப் போயுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று ஓமலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நடுவர், நீ உன்னுடைய பெற்றோருடன் செல்கிறாயா...? அல்லது காப்பகத்துக்கு செல்கிறாயா..? என்று கவிதாவிடம் கேட்டார். அதற்க்கு அவர் தன்னுடைய பெற்றோர்களுடன் செல்வதாக கூறினார்.
வரும் திங்கள் கிழமையன்று சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வேண்டும் என்று கூறிவிட்டு கவிதாவை அவரது பெற்றோருடன் அனுப்பிவைத்தார்.
கைது செய்யப்பட ஆசிரியர் கணேசன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக