செவ்வாய், 27 மார்ச், 2012

அவருக்கே இந்த பட்ஜெட்டின் மீது நம்பிக்கை இல்லை

சென்னை: பட்ஜெட் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி பேட்டி:பட்ஜெட்டில் 1,500 கோடி ரூபாய்க்கு வரி போட்ட பிறகாவது, நம்முடைய மக்களுக்கு தாங்கள் செய்த தவறை உணரக்கூடிய நிலைமை வரும் என்றால், இன்னும் கூட அதிகமாக வரி போட்டிருக்கலாம். பட்ஜெட்டிற்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், டில்லியிலே எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் தெரிவிக்கிற அளவுக்கு, இங்கே அவர்களால் தெரிவிக்க முடியவில்லை.
வெளிநடப்பு ஏன்? : ஸ்டாலின் விளக்கம் :சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சபைக்கு வெளியே ஸ்டாலின் அளித்த பேட்டி:முன்பெல்லாம் பட்ஜெட் என்றால் ரகசியம் என்பார்கள். இப்போது பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, சபை மரபுகளுக்கு மாறாக, முதல்வரே அரசின் திட்டங்களை அறிவித்து விடுகின்ற கூத்து தமிழகத்தில் நடக்கிறது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், 24ம்தேதிய நாளிதழ்களிலேயே முதல்வர் அறிவித்த திட்டங்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக, காவல்துறையை அதிநவீனமாக்க 34 கோடி ரூபாய்க்கு முன்னோடித் திட்டங்கள், போடியில் 94 கோடி ரூபாயில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி என்பன போன்ற அறிவிப்புகளை முதல்வர் செய்து விட்ட பிறகு, அவருக்கே இந்த பட்ஜெட்டின் மீது நம்பிக்கை இல்லை என்ற அளவில், எங்களுக்கும் நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிவிக்கும் வகையில், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: