சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது குறித்த விவகாரத்தை தன்மானமுள்ள தமிழர்களிடமும், தமிழறிஞர்களிடமும் விட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்றப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் தற்போது நூலகம் உள்ள இடத்தில் உயர் தர குழந்தைகள் மருத்துவமனையை அமைக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், இதனை தன்மானமுள்ள தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக