திங்கள், 31 அக்டோபர், 2011

பாடகர் யேசுதாஸின் பெறா மகனுக்கு அமெரிக்காவில் 59 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்கத் தீர்ப்புக்கு எதிராகப் போராடும் ஷசி!

தன் மகனை சிறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக ஒரு பெண் இணையதளம் மூலம் போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்!

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸின் திருவான் மியூர் வீட்டில் தங்கி இருந்த ஷசி ஆபிரஹாமை நேரில் சந்தித்தோம். (ஷசி - யேசுதாஸின் மனைவி பிரபாவின் சகோதரி). அமெரிக்கச் சிறையில் இருக்கும் தன் மகன் ஆனந்த் ஜானின் விடுதலைக்காகத்தான் போராடி வருகிறார் ஷசி.
''என் மகன் சென்னையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்துவிட்டு, 16 வயதிலேயே ஆடை வடிவமைப்பு நிபுணராக அமெரிக்காவில் பணிபுரிந்தான். சின்ன வயதில் இருந்தே ஆனந்த்துக்கு ஃபேஷன் டிஸைனிங் துறையில் ஆர்வம் அதிகம். பல மாடல்களை வைத்து ஷோக்கள் நடத்தி இருக்கிறான். ஓரளவு பணம் சேர்ந்ததும், 'ஆனந்த் ஜான் கம்பெனி’யை அமெரிக்காவில் 2007-ல் ஆரம்பித்தான்.
Jon was born in Kerala, India and came to the U.S. to study at the Art Institute of Fort Lauderdale and later at Parsons The New School for Design.[2] He sold collections at a variety of stores including Bergdorf Goodman in New York City, Wilkes Bashford in San Francisco, and Luisa Via Roma in Florence, Italy.[3]Paris Hilton,[4] Rosario Dawson,[5]Laurence Fishburne,[6] Gina Torres,[7] Oprah Winfrey,[4] and Janet Jackson.[3] His style was primarily known for its specific detail and Indian influence.[4] His clothes had been modeled by and designed for celebrities like
நான், என் மகள் சஞ்சனா, ஆனந்த் ஜான் மூன்று பேரும் லாஸ் ஏஞ்செலஸ் நகரத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். கம்பெனி திறப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை திடீரென்று அமெரிக்க போலீஸார், 'பல பெண்களைப் பலாத்காரம் செய்த குற்றங் களுக்காக உங்க பையனைக் கைது பண்றோம்’ என்று தடாலடியாக அவனைக் கைது செய்தார்கள். 'அவன் எந்தத் தப்பும் பண்ணாதவன்’ என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இழுத்துப் போனார்கள். வழக்கு நடந்தது. 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி, அவனுக்கு 59 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தனர். விபசாரப் பெண்கள் பலரை ஆனந்த் ஜானுக்கு எதிராக நிறுத்தி, குழந்தைகளில் இருந்து வயதான பெண்கள் வரை பலரைப் பலாத்காரம் செய்ததாகச் சொன்னார்கள். அவை எல்லாமே பொய் சாட்சிகள்.

என் மகனின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சி யாகச் செய்யப்பட்ட சதித் திட்டம்தான் இந்த வழக்கு என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

இந்த வழக்குக்கு முக்கிய ஆதாரமாக வாஷிங்டன் சியாட்டல் சிட்டியைச் சேர்ந்த ஜெசி மாரி புளோர் என்ற பெண்ணின் வாக்குமூலத்தைச் சொல்கிறார்கள். ஜெசி எட்டு மாதமாகத்தான் ஜானுக்கு ஃபேஸ் புக் மற்றும் சாட்டிங் மூலமாகப் பழக்கம். அவளே தன்னை நிர்வாணமாக படம் எடுத்து ஜானின் மெயில் மற்றும் மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறாள்.

ஜானிடம் உண்மையைக் கண்டறிவதற் காக நடத்தப்பட்ட பாலிகிராஃப் (polygraph) பரிசோதனை, அவன் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை என்றே சொன்னது. ஜெசியை மருத்துவப் பரிசோதனை செய் தார்கள். அதில் எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை'' என்று விம்மினார்.

அவரே தொடர்ந்து, ''என் மகள் சஞ்சனாவும், நானும்தான் இன்று வரை போராடி வருகிறோம். 16 வயதில் அமெரிக்காவில் அட்மிஷன் கிடைத்துப் போனவனுக்கு இப்படி ஒரு சோதனை. ஆனந்துக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அவனுக்கு குடி, சிகரெட் என்று எந்தப் பழக்கமும் கிடையாது. இருந்தும் பல பெண்கள், 'குடிச்சுட்டு வந்து என்னை 'ரேப்’ செய்தான் என்று ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

அவன் பன்றி இறைச்சியை தொடவே மாட்டான். ஆனால், கடந்த நான்கு வருடங்களாக, சிறையில் அதை மட்டுமே கொடுத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அவனை மீட் பதற்காக எங்கள் பணம் அத்தனையும் செல வாகிவிட்டது. அதனால்தான் அவனை மீட்க, பொதுமக்களை உதவச் சொல்லி ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன்.



இப்போதைக்கு ஆனந்த் ஜானை மீட்பதற்காக, 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் துணைத் தலைவர் லட்சுமி மேனன், மூத்த வழக்கறிஞர் விஜயராகவன், யேசுதாஸ், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனந்த் ஜான் குற்றம் செய்யாதவன் என்று நிரூபிக்கப்பட்டாலும், நீதிமன்றம் சொல்லும் தொகையைக் கட்டித்தான் அவனை வெளியில் கொண்டுவர முடியும். அதனால்தான் இணைய தளத்தின் மூலமாக பொதுமக்கள் உதவியைக் கேட்கிறேன்...'' என்று சொல்லி முடித்தபோது, கண்ணீர் பொங்கி வழிந்தது.

ஜானின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் பல சதிகள் செய்து சிக்கவைத்து விட்டதாகச் சொல்வதைத் தாண்டியும் இந்த விவகாரத்தில் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள்.

நியாயம் வெல்லட்டும்!

- வே.கிருஷ்ணவேணி

படம்: ஜெ.தான்யராஜூ

thanks vikatan+bridgette cecilia Rochester USA

கருத்துகள் இல்லை: