சனி, 5 நவம்பர், 2011

44 பேரில் 40 பேர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக அவுஸ்திரேலிய

படகு மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 44 பேரில் 40 பேர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது

படகு மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 40 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
படகில் பயணம் செய்த 44 பேரில் 40 பேர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்களினால் அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த 44 படகுப் பயணிகளும் மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் என அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களை நாடு கடத்த முடியும் எனவும் தெரவிக்கப்படுகிறது.

தடுப்பு முகாமகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டுப் பிரஜைகளினால் அவுஸ்திரேலியா பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடு என்ற ரீதியில் அவுஸ்திரேலியா, புகலிடக் கோரிக்கையாளர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியாது.

எனவே, இவ்வாறு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடுமென சந்தேகிக்கப்படும் நபர்கள் கால வரையறையின்றி தடுப்பு முகாம்களில் தங்கியிருக்க நேரிடும்.

இதேவேளை, 40 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக அவுஸ்திரேலியாவின் ஆசியோ பாதுகாப்பு பிரிவு அடையாளப்படுத்திய போதிலும், உரிய காரணங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் புகலிடக் கோரிக்கையாளர் விவகார தேசிய இணைப்பாளர் பாலா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நபர்களில் ஒருவர் மட்டுமே புலிகளின் மருத்துவ பிரிவில் கடயைமாற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபரும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புலிகள் இலங்கைக்கு வெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தாத போதிலும் முன்னாள் போராளின் தமது திறமைகளை பிழையான வழிகளில் பயன்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவுஸ்திரேலிய மெக்யூரி பல்கலைக்கழக பயங்கரவாத ஒழிப்பு பேராசிரியர் சங்க ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பல போராளிகள் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்கள் எனவும் சர்வதேச பயங்கரவாத நீரோட்டத்தில் இணைந்து கொண்டால் ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் சர்வதேச உரிமைகளின் அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக வாதாடி வருவதாக சிட்னி பல்கலைகழக சட்டப் பேராசிரியர் பென் சோல் தெரவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: