புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்காக நடத்திய விடுதலைப் போரா ட்டம் முள்ளிவாய்க்காலில் முழுமையாக மழுங்கடிக்கப்படுவதற்கு அவர்கள் விட்ட மாபெரும் வரலாற்றுத்தவறுகள் பல காரணமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக இற் றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து தமிழ் பேசும் மற்று மொரு சகோதர இனமான முஸ்லிம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமையைக் குறிபிடலாம்.
பெரும்பான்மையின அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்களில் அநீதியாகச்செயற்படுகிறது என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை வழிப் போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறி அது திசைமாறிச் சென்ற போது முற்றா கவே அழித்தொழிக்கப்பட்டது வரலாறாகிவிட்டது.
இந்த உரிமைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தமிழ் மக்களுக்காக தமிழ் பேசும் மக்களா கிய முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை வடக்கு கிழக்கில் வழங்கி வந்தனர். வட க்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேச முஸ்லிம்கள் தமிழ் இயக்க ஆயுதப் போராட்டம் குறித்து அலட்டிக் கொள்ளாத வேளையில் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் இப் போராட்டத்தில் தமது பங்களிப்பைச் செலுத்தினர்.
போராட்ட கால ஆரம்பத்தில் இருந்த ஆயிரத்தெட்டு இயக்கங்களில் தமிழ் இளைஞர்களுடன் முஸ்லிம் இளைஞர்களும் தம்மை இணைத்து உண்மையான அன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்தளவிற்கு வடக்கு, கிழக்கில் தமிழர்களுடன் முஸ்லிம்களும் இணைந்து மிகவும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். வடக்கு கிழக்கில் இன்று தமிழருக்கு நடக்கும் அநீதி நாளைக்கு தமக்கும் இழைக் கப்படலாம் என அன்று வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் எண்ணிப் பயப்பட்டதனா லும், சகோதரர்கள் போன்று வாழ்ந்துவரும் தமிழரது பிரச்சினைக்கு வழிகாணத் தாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதனாலுமே அவர்கள் அன்று தமிழரது போராட்டத் திற்கு ஆதரவு வழங்கி வந்தனர்.
ஆனால் புலிகளுக்கு திடீரென்று என்ன நடந்ததோ தெரியாது. முதலில் சகோதர தமிழ் இயக் கங்களைச் சேர்ந்த சகலரையும் சரணடையுமாறு கட்டளையிட்டனர். சரணடையாதோரைச் சுட்டுத்தள்ளினர். ஒரே இலட்சியத்திற்காகப் போராடிய சக தமிழ் இளைஞர்கள் பலரை இவ்வாறு துடிதுடிக்கக் கொன்றனர். அடுத்ததாக அவர்கள் அங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களை இருபத்து நான்கு மணிநேர கால அவகாசத்திற்குள் வடமாகாணத்திலிருந்து உடுத்த உடுப்புகளுடன் விரட்டினார்கள். பரம் பரை பரம்பரையாக வடக்கில் தமிழ் மக்களுடன் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது உடைமை கள், சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு துப்பாக்கி முனையில் வடக்கின் எல்லை வரை விரட்டி வந்து விடப்பட்டனர். ஏன், எதற்கு, என்ன தவறு செய்தார்கள் என எவ ருமே கேட்க முடியாத நிலை. கேட்கச் சென்ற சில தமிழ் பிரமுகர்களின் நெற்றிப் பொட் டில் துப்பாக்கி முனையை நீட்டினார்கள். இன்று வரை வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஏன் விரட்டப்பட்டார்கள் எனும் மர்மம் தொடர்கிறது.
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த மக்களை புத்தளமே வரவேற்றது. அன் றிலிருந்து இன்றுவரை சுமார் இருபது வருடங்கள் அந்த யாழ். முஸ்லிம்கள், மன்னார், முல் லைத்தீவு முஸ்லிம்கள் அகதிகள், இடம்பெயர்ந்த மக்கள் எனும் சொற்பதங்களுடன் குடி சைகளில் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கமோ அல்லது வெளிநாடுகள் மற்றும் அரச சார் பற்ற நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் என்னதான் உதவிகளை வழங்கி இந்த முஸ்லிம்களை ஆற்றுப்படுத்தி வாழவைத்தாலும் அந்த மக்களின் மனங்களில் அன்றைய அச்சம்பவம் மாறாத, நீக்க முடியாத வடுவாகவே இருந்து வருகிறது.
தமிழ் மக்களது போராட்டத்தில் இந்தத் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் இணைத்துச் சென் றிருந்தால் போராட்டம் வலுப்பெற்றதாக அமைந்திருக்கும். வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் தலைமைகளும் தமிழர் உரிமைகளை வழங்க அன் றைய அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும், இதுவே புலிகள் விட்ட வரலாற்றுத் தவ றுகளுள் ஒன்றாக அமைந்துவிட்டது.
புலிகளுடன் முன்னைய அரசாங்கங்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் முஸ் லிம் தலைவர்களை அவர்கள் சந்தித்த போதும் கூட இந்த விரட்டியடித்து வெளியேற்றப் பட்டமை குறித்துப் பெரிதாக வருத்தம் தெரிவிக்காமை அவர்களது கடும்போக்கை எடுத் துக்காட்டியது. இருந்தும் இறுதி யுத்தத்தில் அரச படைகள் ஒவ்வொரு அங்குலமாகமுன் னேறி வன்னியைக் கைப்பற்றி மனிதாபிமான முறையில் மக்களை மீட்ட போதும், புலி களைச் சரணடைய வைத்தபோதும் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் என்பவற்றை வழங்கி அரசின் சார்பில் முன்னின்று உதவி செய்தவர் முன்னர் யுத்தத்தி னால் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை சரணடை ந்த புலிகள் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
இடப்பெயர்வின் வலி என்ன என்பதை அவர் உணர்ந்திருந்ததனால் அம்மக்களுக்கும் ஏன் சர ணடைந்த புலிகளுக்கும் அரசின் சார்பாக பல உதவிகளைச் செய்தார். காரணம் எதுவும் கூறப்படாது கலைத்து விடப்பட்டவர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்திருந்தால் புலிகளு க்கு இந்நிலை நிச்சயம் வந்திருக்காது.
அன்று வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் புலிகள் தவறிழைத்த போது மெளனமாக இருந்த தமிழ்த் தலைமைகள் இன்று புலிகள் இல்லாத போதும் அது பற்றி பெரிதாக வருத்தம் தெரிவிக்கவில்லை. இருபது வருடங்கள் கழித்து அம்மக்கள் தமது சொந்த இருப்பிடங்க ளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதும் அதற்குப் பெரிதாக வரவேற்பும் தெரிவித்ததா கத் தெரியவில்லை. வடக்கில் குடியேறும் முஸ்லிம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உத விகளை உரியமுறையில் வழங்குவதற்குக் கூடச் சில அதிகாரிகள் மனமில்லாது காணப்படு கின்றனர்.
காரணம் கேட்டால் உங்களுக்குப் புத்தளத்தில் காணி வழங்கப்பட்டுள்ளது, வீடு கட்ட நிதி கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி தட்டிக் கழிக்கும் செயலை மேற்கொள்கின்றனர். இனிமே லும் இரு சமூகங்களும் வடக்குக் கிழக்கில் பிரிந்து செயற்படுவது இரு சமூகங்களுக்குமே ஆரோக்கியமானதல்ல என்பதை இரு சமூகங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வரில் ஒருவர் குளிர்காய்வதை விடுத்து இனியாவது ஒற்றுமையுடன் செயற்பட்டு உரிமைக ளையும், சலுகைகளையும் பெற்று உயர்வாக வாழ்வதே சிறந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக