வெள்ளி, 4 நவம்பர், 2011

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு!

பெங்களூர் : சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் நவம்பர் 8ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நவம்பர் 8ம் தேதி ஆஜராக முடியாமல் போனால் நீதிபதியிடம் வேறு தேதியை கேட்டு பெறலம். ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தும் நாட்களுக்கு வரம்பு எதுவும் இல்லை எனவும், மொத்த கேள்விகள் கேட்கப்படும் வரை ஜெயலலிதாவிடம் விசாரணை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் விசாரணை முடியாவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் விசாரணையை தொடரலாம் என்றும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வழக்கின் முக்கியதுவத்தை அறிந்து வழக்கை விரைவில் முடிக்கவும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் தவ்வீர் பண்டாரி உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: