புதன், 2 நவம்பர், 2011

நான் கைதுசெய்யப்படவேண்டும் என்று விரும்பும் ஊடக விபச்சாரிகள்!

டான் ரிவி குகநாதனின் முகநூலிலிருந்து
இலங்கை ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் சிங்கப்பூரில் கைது என்று இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பல ஊடகவியலாளர்கள் டான் ரிவி அலுவலகத்துடன் தொடர்புகொண்டு நான் கைது செய்யப்பட்டிருப்பதாக கேட்கத் தெடங்கிவிட்டனர். கைது செய்யப்பட்டவர் 5 லட்சம் சிங்கப்பூர் டொலர்களுடன் கைதுசெய்யப்பட்டதாக அந்தச் செய்தி வந்தபோதே அதற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்காது என்பதை அவர்களால் ஊகிக்க முடியவில்லை.

எமது அலுவலகத்தில் இருந்தவர்கள் நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக தெரிவித்தபோதிலும் அவர்களால் நம்பமுடியவில்லை. தயா மாஸ்டர், சர்தார் என்று பலருடனும் தொடர்ச்சியாக தொடர்பை ஏற்படுத்தினார்கள்.
24ம் திகதி நெல்லியடி மத்திய கல்லாரியில் நடைபெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டேன்.
26ம் திகதி யாழ். நகரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன். 27ம் திகதி சிகரம் ஊடக இல்லம் நடாத்தவிருக்கும் புதிய ஊடக பாடநெறி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டேன். 28ம் திகதி யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் அதிபர் ராஜதுரையின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இவர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்.
29ம் திகதி சிவாஜிலிங்கம் உடனான முற்றத்து அரசியல் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்தேன். 30ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்துகொண்டிருந்தபோதுதான், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் தொடர்புகொண்டு சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் யார் என்று கேட்டபோதுதான் அப்படி ஒருவர் கைதுசெய்யப்பட்ட செய்தியையே அறிந்துகொண்டேன். அமைச்சரும் நான் கைதுசெய்யப்பட்டதாக அறிந்துதான் என்னுடைய தொலைபேசிக்கு போன் பண்ணியிருப்பார் என்பதை பின்னர் தான் ஊகிக்க முடிந்தது.
நான் கைதுசெய்யப்படவேண்டும் என்று விரும்புகின்றவர்கள், தமது ஊகங்களை செய்தியாக்குவது இப்போதைய ஊடக ஜாம்பவான்களின் கைவந்த கலைதானே !

கருத்துகள் இல்லை: