சனி, 5 நவம்பர், 2011

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை சொந்த நாட்டுக்கு அனப்பி வைக்க முடியும்: சுவிட்சர்லாந்து மத்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது!

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை சொந்த நாட்டுக்கு அனப்பி வைக்க முடியும் என சுவிட்சர்லாந்து மத்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியும் என சுவிஸ் மத்திய குடியேற்றத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் செனட் சபையினரும் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, புகலிடம் கோரிய இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துவது ஆபத்தாக அமையக் கூடும் என மற்றுமொரு தரப்பினர் சுட்டிக்காட்யுள்ளனர்.
எவ்வாறெனினும் இலங்கையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை சுமூக நிலைக்குத் திரும்பி வருவதாகவும் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: