புதன், 2 நவம்பர், 2011

Freedom Speaks சுகந்திரத்தின் பேச்சு எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது




சுகந்திரத்தின் பேச்சு என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்ட்டுள்ள “பிரீடம் ஸ்பீக்” எனும் ஆவணப்படம் இன்று (நவ-01) மாலை 5 மணிக்கு கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின், தரங்கனி திரையங்கில் திரையிடப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார். இலங்கையின் முன்னனித் திரைப்படத் தயாரிப்பாளரான சுனித் மாலிங்க லொகுஹேவாவின் இயக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இவ் ஆவணத் திரைப்படம், ஜீவா சந்திமாலினால் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் புலிகளால் அப்பாவி பொதுமக்கள் உட்பட அதன் உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர செயற்பாடுகள் ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.

இவ் ஆவணப் படமானது, இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல் இலங்கை்கு எதிராக சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது. என இயக்குனர் சுனித் மாலிங்க அறிமுக உரையில் தெரிவித்தார்.

39 நிமிடங்களை கொண்ட இவ் ஆவணப்படமானது, விசேட அதிதிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு மத்தியில் திரையிடப்பட்டது.

கருத்துகள் இல்லை: