ஞாயிறு, 23 அக்டோபர், 2011

மீண்டும் இலங்கைக்கு ஜி.எஸ்.பி - ஒபாமா ஒப்புதல்!

இலங்கைக்கு மீண்டும் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை வழங்குவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா கையொப்பமிட்டுள்ளார்.
இதற்கமைய அடுத்த மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச் சலுகை கிடைக்குமென கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் கடந்த காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இந்த சலுகையை வழங்கவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இந்த வரிச் சலுகை அமுலில் இருக்குமென கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா அமுல்படுத்தி வரும் ஜி.எஸ்.பி திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக வரிச்சலுகை வழங்கப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட 129 நாடுகளுக்கு நான்காயிரத்து 400 பொருட்களுக்கு ஜி.எஸ்.பி வரிச் சலுகை கிடைத்துள்ளது.
2010 ஆம் ஆண்டுக்காக மாத்திரம் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி திட்டத்தின் மூலம் ஏற்றுமதி பொருட்களுக்காக இலங்கைக்கு 147 மில்லியன் டொலர் வரிச் சலுகை கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: