கொழும்பு மாநகர சபை நிலையான ஆட்சிக்கு மனோ கணேசனின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் ஐ.தே.க!
கொழும்பு மாநகர சபையை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ள போதிலும் நிலையானதொரு ஆட்சியை வழங்குவதற்கு மனோ கணேசனின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்து உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஐக்கிய தேசியக்கட்சி 101,920 வாக்குகளுடன் இருபத்துநான்கு ஆசனங்களைப் பெற்று மாநகரசபைக்கான ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க ஐ.தே.க 27 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 24 ஆசனங்களையே பெற்றுள்ளது. இந்நிலையில் நிலையானதொரு ஆட்சியை அறுதிப் பெரும்பாண்மையுடன் ஐ.தே.கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானால் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகளின் படி ஐ.ம.சு.கூட்டமைப்பு பதினாறு ஆசனங்களையும், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி ஆறு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி என்பன தலா இரண்டு ஆசனங்களையும் சுயேட்சை குழுக்கள் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக