""அதோடு இப்ப வைட்டமின் ப மூலமாகவும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறதுன்னு ஃபார்முலா வகுக்கப்பட்டிருக்கு. அதாவது, இந்த தேர்தலிலும் தி.மு.க.வைத் தோற்கடிக்கணும். கூட்டணியிலிருந்து விலகிப்போன எல்லாக் கட்சிகளையும் செல்லாக்காசாக்கணும்னு ஜெ சொல்றாராம். அதற்காக 300 கோடி பட்ஜெட்டில் உள்ளாட்சித் தேர் தலை சந்திக்க அ.தி.மு.க ரெடியாயிடிச்சி. எங்கெங்கே கட்சி வீக்கா இருக்கோ அங்கெல்லாம் பணத்தாலேயே பலத்தைப் பெருக்குவதுங் கிறதுதான் ஜெ.வின் மெகா திட்டம். உள்ளாட்சி அமைப்புகளில் 90% இடங்களை பணத்தாலும் அதிகாரத்தாலும் ஜெயிச்சிட்டா, ஆளுங் கட்சிக்காரங்க கையிலே தொடர்ந்து காசு புரளும். அது, 2014 எம்.பி. எலெக்ஷனில் ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்னு கணக் குப் போடப்பட்டிருக்கு.''
""அ.தி.மு.க.வின் இந்த மெகா பட்ஜெட்டை தி.மு.க எப்படி சமாளிக்கப் போகுதாம்?''
""தலைமையிலிருந்து எந்த செலவையும் கவனிக்க முடியாதுன்னு தி.மு.க சொல்லிடிச்சி. எம்.எல்.ஏ எலக் ஷனிலேயே ஒட்டு மொத்தமா செலவு பண்ணிட்டதால இப்ப அவங்கவங்களே செலவு பண்ணிக்கவேண்டியதுதான்னு அறிவாலயத்திலிருந்து இன்ஸ்ட் ரக்ஷன் வந்திடிச்சி. மாவட் டத்தில் உள்ள முக்கிய நிர்வாகி கள்கூட பெருசா பணத்தை எடுக்கலை. யார் யார் போட்டி யிடுறாங்களோ அவங்களே பார்த்துக்குறாங்க. கட்சி பலமும், சொந்த செல்வாக்கும், ஆட்சி மீதான அதிருப்தியும் தி.மு.க. வுக்கு சாதகமா இருக்கும்னு தலைமை நம்புது. ஆளுந்தரப் பின் கையில் உள்ள உளவுத் துறை ரிப்போர்ட்டிலும்கூட, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வின் வெற்றிவாய்ப்பு நல்லாவே இருக்கும்னு சொல்லப்பட்டி ருக்காம்.''
""ஆளுங்கட்சியின் 300 கோடி ரூபாய் மெகா பட் ஜெட்டையும் தாண்டியா?'' ""பணத்தை மீறி எதிர்க் கட்சிக்கு வெற்றி கிடைக்கிற சூழ்நிலை வந்தால் அதை சமா ளிக்கிறதுக்கும் அ.தி.மு.க சைடில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டி ருக்கு. மேலிடத்திலிருந்து சொல் லப்பட்டுள்ள அந்த திட்டத்தை, மந்திரிகளும் மா.செ.க்களும் தங்களுக்கு கீழே உள்ள நிர் வாகிகள்கிட்டே சொல்லி, கவுன்சிலர் வேட்பாளர்கள் வரைக்கும் தெரிவிச் சிருக்காங்க. அது என் னன்னா, அ.தி.மு.க. வின் ஒவ்வொரு வேட் பாளரும் குறைந்த பட்ச ஓட்டு வாங்கிட் டால், கவுண்ட்டிங் கில் உள்ள அதிகாரிகளை வச்சி, இலைதான் ஜெயிச் சதுன்னு அறிவிக்க வச்சிடுறது. எதிர்க்கட்சிகள் பிரச்சினை பண்ணினால் வெளியே அனுப்பிவிடுவது. அதற்கப்புறம் கோர்ட்டுக்குப் போய் பார்த்துக்கொள்ளட்டும்ங்கிறது தான் திட்டம். இது தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் வட்டாரத்தில் பரவி, கவுன்ட்டிங்கை எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. தி.மு.க சைடில், ஒவ்வொரு கவுன்ட்டிங் சென்டருக்கும் ஏராளமான தொண்டர்களோடு போங்க. அப்படிப் போனால்தான் தில்லுமுல்லு செய்றதுக்கு ஆளுந்தரப்பு யோசிக்கும். அதையும் மீறி தில்லுமுல்லு செஞ்சா, சட்டரீதியா சந்திக்கலாம்னு சொல்லப்பட்டிருக்கு.''
thanks nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக