சிறுவனை நரபலி கொடுத்தது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.மேகாலயா மாநிலம் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ள துராவில் எல்லை பாதுகாப்பு படையின் 121வது பட்டாலியன் முகாம் இருக்கிறது. இங்கு சமையல்காரராக பணியாற்றுபவரின் 7 வயது மகன் கிருஷ்ணா சிங். கடந்த புதன்கிழமை திடீரென காணாமல் போனான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, துரா காவல் நிலையத்தில் சமையல்காரர் புகார் கொடுத்தார். போலீசார் தேடியபோது, முகாமுக்கு சற்று தொலைவில் உடல் முழுவதும் ஏராளமான காயங்களுடன் கிருஷ்ணா சிங் இறந்து கிடந்தான். அவனுடைய உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவன் உடல் பல இடங்களில் கிழிக்கப்பட்டு, ஊதுவத்திகளை குத்தியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இதனால், அவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு சில தினங்களுக்கு முன் அசாமை சேர்ந்த மந்திரவாதி ஒருவர் வந்து பூஜை செய்து விட்டு போனதாக தகவல் கிடைத்தது. உடனே, அசாம் மாநிலத்தில் உள்ள மன்காசார் பகுதிக்கு விரைந்து சென்ற துரா போலீசார், மந்திரவாதியை கைது செய்து அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது உறுதியானது. இதில், எல்லை பாதுகாப்பு படை முகாமில் பணியாற்றும் போலீசாரான சந்த்ராவன், பாபுகான் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் எதற்காக நரபலி கொடுக்கப்பட்டான் என்ற விவரம் தெரியவில்லை. அது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Shillong: Two Border Security Force (BSF) troopers were detained on Friday for allegedly killing a seven-year-old boy as part of an occult "human sacrifice" in Meghalaya, police said.Krishna Singh, son of a BSF trooper, went missing on Wednesday after visiting a Durga Puja marquees with his elder brother in a BSF campus at Prahari Nagar in Tura in the western part of Meghalaya.
When the boy's family and BSF personnel launched a hunt, the body was discovered with multiple injuries in the campus on Thursday morning.
"It is a gruesome murder and we are suspecting it to be a case of human sacrifice," Meghalaya police chief N. Ramachandran told IANS.
He said two BSF troopers -- Chandrawan and Babu Khan -- had been detained and were being interrogated.
Police have also gone to Mankachar in Assam to quiz Lukman Haqib, a tantrik priest in connection with the murder.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக