ஞாயிறு, 17 அக்டோபர், 2010

தமிழக அரசின் இரண்டு ஏக்கர் நில திட்டம் வெற்றியா? தோல்வியா?

கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில், நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் தரிசு நிலம் வழங்கப்படும், என்ற அறிவிப்பும் ஒன்று. ஆனால் நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த திட்டத்தை பற்றி வரும் தகவல்களை வைத்து பார்க்கும் போது, இந்த திட்டம் வெற்றி பெற்றதா என்ற கேள்வி எழுகிறது.

நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவது மேற்கு வங்கத்தில் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு காலகட்டத்தில் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதை ஒரு மிகப்பெரிய திட்டமாக கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அறிவித்தது. ஆட்சியில் அமர்ந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக செயல்பட்டது.பல மாவட்டங்களில் முக்கிய அமைச்சர்கள் தலைமையில் நடந்த விழாக்களில் நிலப்பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பயனாளிகளின் பட்டியல் 2009ல் பல்வேறு மாவட்டங்களின் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இத்தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையில் கொடுக்கப்பட்டதை விட மிக குறைவாகவும், தெளிவில்லாமல் உள்ளது.தேனி மாவட்டத்தில் போடி தாலுகா, ராசிங்காபுரம் கிராமத்தில், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. பொட்டிபுரம் கிராமத்தில் வழங்கப்பட்ட நிலம் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என பயனாளிகள் தெரிவித்து உள்ளனர். உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் பகுதியில் முக்கிய புள்ளி ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து பட்டா பெற்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.ஆண்டிபட்டி தாலுகாவில் வருசநாடு, கடமலைகுண்டு ஆகிய பகுதிகளிலும் நிலங்கள் மொத்தமாக வளைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இங்கிருந்து பல வருடங்களுக்கு முன் வெளியூர் சென்றுவிட்டவர்களின் பெயர்களில் நிலம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் தாலுகா, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கிராமங்களில், பகுதி ஒன்று மற்றும் இரண்டில், கொடுக்கப்பட்டுள்ள நிலங்களில் 90 சதவீதம் பயனாளிகளுக்கு சென்றடையவே இல்லை.இந்த நிலங்களை அப்பகுதியை சார்ந்த, அரசியல் ஆதரவு பெற்ற ஒருவர், பகிரங்கமாகவே ஆக்கிரமித்துள்ளார். பாதிக்கப்பட்ட பயனாளிகளில் இருவர் சென்று தங்கள் நிலங்களை கேட்டதற்கு, அங்குள்ள போலீசார் தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் ஏழை விதவை பெண். அவரையும் மிரட்டி ஊரை விட்டு காலி செய்துள்ளனர். இந்த மாவட்டத்தில் நிலம் கொடுத்ததாக அறிவிக்கபட்ட பயனாளிகளுக்கு மூன்று வருடமாகியும் பட்டா வழங்கப்படவில்லை.

திண்டுக்கல் மாவட்டம் (தாலுகாவில்) அமைந்துள்ள கோணபட்டி கிராமத்தில் இலவச இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்ததாக இணையதளத்தில் கணக்கு காட்டப்பட்டுள்ள பட்டியலுக்கும், உண்மையில் கொடுத்திருக்கும் பட்டியலுக்கும் தொடர்பே இல்லை. நிலக்கோட்டை தாலுகாவில் வத்தலக்குண்டு, சந்தையூர் கிராமத்தில் கொடுக்கப்பட்ட நிலங்கள் அங்குள்ள ஒரு அரசு ஊழியர் வசம் உள்ளது. ஒட்டன்சத்திரம் தாலுகா எல்லப்பட்டி கிராமம், ஆத்தூர் தாலுகாவிலும் இப்பிரச்னை உள்ளது.திருச்சி, கோவை மாவட்டங்களில் தவறுகள் அதிகமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தெளிவில்லாமல் இருக்கிறது. உதாரணமாக, ""முனியம்மாள் - க/பெ ராகவன், சர்வே எண் 1222/4 கொடுக்கப்பட்டுள்ள நிலம் 60 சென்ட் திருச்சிராப்பள்ளி மாவட்டம்''  என்று தான் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் எத்தனை பேர் முனியம்மாள் என்ற பெயரில் இருப்பார்கள் என்பதை எப்படி தேடுவது? இந்த மாவட்டத்தில் சூரியூர் எனும் கிராமத்தில் இலவசமாக கொடுக்கப்பட்ட நிலங்கள் பிளாட் போட்டு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை போத்தனூர், செட்டிபளையம், மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் நிறைய தவறுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகா, சாயமலை வலசை கிராமத்தில் இலவச நிலம் வழங்கப்பட்டதாக இணையதள பட்டியலில் உள்ளது. ஆனால் வழங்கப்பட்ட நிலம் கிராமத்தில் இல்லை என கிராம அலுவலரே கூறுகிறார்.

மூன்று வருடம் மக்கள் அலைந்தது தான் மிச்சம்.பாளையங்கோட்டை தாலுகா மேலப்பட்டம் கிராமத்தில், 14 ஏக்கர் நிலத்தை தொழிற்சங்கத் தலைவரின் அண்ணன் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அம்பாசமுத்திரம் தாலுகாவில் பிரபல சாமியார் ஒருவர் நிலம் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.முக்கிய தகவல்கள்: இரண்டு ஏக்கர் திட்டத்தை பொறுத்தவரை 60 சதவீதம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை வளைத்து போட்டவர்கள் பட்டா பெற்று விட்டனர்.ஏழை விவசாயிகள் மட்டுமே பயன்பெற வேண்டிய திட்டத்தில் நல்ல நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் பெயரில் எப்படி நிலம் வழங்கப்பட்டது எனத் தெரியவில்லை. நிலம் வழங்கப்பட்டதாக கூறப்படும் பயனாளிகள், தங்களுக்கு அப்படி ஏதும் தரப்படவில்லை என்று கூறுகின்றனர். எப்படி ஒருவர் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் நிலம் உள்ளது.

 இந்த வேலையை யார் செய்தது, இலவச நிலப்பட்டியலில் உள்ள சிலர் சம்பந்தப்பட்ட ஊரிலேயே இல்லை. அவர்கள் யார்? எங்கிருக்கின்றனர் என்று தெரியவில்லை.பொதுவாக கிராமத்தில் செயல்படுத்தப்படும் எந்த திட்டமாக இருந்தாலும், கிராமசபா கூட்டத்தில் விவாதம் நடத்துவர். ஆனால் இத்திட்டத்தை, செயல்படுத்திய வருவாய் துறையினர் பெரும்பாலும் எந்த ஒரு ஊராட்சி தலைவரையும் (கையெழுத்து வாங்க மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்), மக்களையும் கலந்தாலோசிக்காமல், பயனாளிகள் பட்டியல் தயாரித்துள்ளனர். அப்பாவி மக்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட இலவச நிலங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாதவை. பயன்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை, போய் வர பாதையாவது வேண்டுமென்றால் அதுவும் இல்லை. நல்ல நிலங்கள் ஏழைகளுக்கு கிடைக்கவில்லை. அவைகள் யாருக்கு சென்றன? என்பதும் தெரியவில்லை.

இலவசமாக கொடுக்கப்படும் நிலத்தை 30 வருடங்களுக்கு யாருக்கும், குத்தகையோ, விற்பனையோ செய்யக் கூடாது என்று சட்டம் உள்ள நிலையில் கணிசமான நிலங்கள் கைமாறி உள்ளது.பெரும்பாலான மாவட்டங்களில் நிலம் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்படவே இல்லை. இதில் மதுரை, காஞ்சிபுரம் போன்ற முக்கிய மாவட்டங்களும் அடங்கும். மொத்தத்தில் இத்திட்டம் பட்டியல் தயாரிப்பதிலிருந்து, நிலம் கொடுத்து முடித்தது வரை ஏராளமான கேள்வியும், குழப்பமும் நிறைந்துள்ளதை வைத்து பார்க்கும் போது "இலவச இரண்டு ஏக்கர் நில திட்டம் தோல்வியடைந்து விட்டதா?' என்ற சந்தேகம் எழுகிறது.
makkan - Shanghai,சீனா
2010-10-17 17:48:12 IST
இந்த திட்டத்தால் என்னுடுய நிலம் என்னுடைய ஆட்களாலேயே அபகரிக்க பட்டது. நாங்கள் எங்கள் மூததையர் நிலத்தை காப்பற்ற சில விவசாயிகளிடம் குத்தைக்கு 10 வருடங்களுக்கு முன் குத்தகைக்கு விட்டோம். 2 வருடங்கள் குத்தகை கொடுத்தவர்கள் நிலத்தில் ஒன்றும் விளைவதில்லை என்று குறை கூறி குத்தகை கொடுக்கவில்லை. நாங்களும் ஏழை விவசாயிகள் என்று பரிதாப பட்டு விட்டுவிட்டோம். சில நாட்கல்லுக்கு முன் சென்று பார்த்த பொது என் நிலத்தில் குத்தகை எடுத்தவர்கள் வீடு கட்டிக்கொண்டு இருந்தனர். நான் சென்று நிறுத்த சொன்னதற்கு இது ஒன்றும் உன் நிலமல்ல. இது என் பெயரில் அரசு பட்ட கொடுத்து விட்டார்கள். இனிமேல் இங்கு வந்து என் நிலம் என்று சொல்லாதிர்கள். முடிந்தால் எங்கள் மேல் வசக்கு தொடுரங்கள் என்று எங்களிடமே சண்டை போட்டார்கள். எங்களாலும் அரசை எதிர்த்து வசக்கு போடா முடியவில்லை. அப்படிஏய் விட்டு விட்டோம்....
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-17 17:38:30 IST
இந்த திட்டம் பற்றி உண்மையிலேயே யாருக்காவது உண்மையை தெரிந்து கொள்ள ஆசையா, செல்லுங்கள் இன்றே கோவைக்கு. கோவையை சுற்றியுள்ள, பலருக்கு, அரை சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை "இரண்டு ஏக்கர் இலவச நிலம்" திட்டத்தின் வழங்கப்பட்டது. மறுக்கவில்லை. ஆனால் , அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் இந்த நிலம் பெற்ற ஏழைகளுக்கு அல்வாவை இலவசமாக கொடுத்து நிலங்களை தனக்கு சொந்தமான கல்லுரி வளாகத்துக்குள் இணைத்துக்கொண்டுவிட்டார், ஆமாம் இவரும் தன தந்தை சொல்லை தவறாது கடைப்பிடிப்பவர்தான்....
சாமி - MUSCAT,ஓமன்
2010-10-17 16:22:56 IST
இந்த திட்டத்தின் மூலம் திமுக னர்தான் கொள்ளை அடித்துள்ளனர்........................
பிச்சைக்காரன் - தருசுநிலம்விற்பனைதெரு,இந்தியா
2010-10-17 14:39:49 IST
அய்யா எப்ப இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க போறீர்கள்.ஏற்கனவே நம்ம ரியல் எஸ்டேட் காரனுக பொறம்போக்கு இடத்தை எல்லாம் ஒரு நிலம் வாங்கினால் இரண்டு இலவசம் என்று விற்று தள்ளிவிட்டார்கள்...சும்மா இப்படி சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்......
R.SURESH KUMAR - COIMBATORE,இந்தியா
2010-10-17 14:06:14 IST
கலைஞர் ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில்தான் இந்த திட்டத்தை கொண்டுவந்தார்.சில இடைதரகர்களால் இத்திட்டம் எடுபடாமல் போய் விட்டது....
ச.Vasudevan - Chennai,இந்தியா
2010-10-17 13:45:51 IST
When Professor Naganathan of the Madras University brought this into DMK's manifesto, this was ex[expected to be a failure. This was indeed a vote bank gimmicks to entice the gullible masses to vote in favour of DMK and was never intended to help the poor persons. In 2006, the idea was to come to power at any cost. swindle crores of public money. Never in their wildest dreams had a notion of helping the poor persons. It is time the poor persons be aware of such rascals....
தமிழன் - TAMILNADU,இந்தியா
2010-10-17 13:07:00 IST
எல்லாம் DMK காரன் வீட்டுப் bearrow ல இருக்கும் ....
vimal - tirupur,இந்தியா
2010-10-17 12:53:49 IST
நடைமுறைக்கு சாத்தியமில்லாத முட்டாள்தனமான திட்டம்... delhi iyappan think best...
செந்தில் - மதுரை,இந்தியா
2010-10-17 11:53:05 IST
இந்த திட்டம் 100 % வெற்றியே, ஒரு காலத்தில் கூலி வலை செய்தவன் இன்று தன்னுடைய 2 ஏக்கர் சொந்த நிலத்தில் தானே விவசாயம் செய்து சாப்பிட்டு தன்மானத்துடன் வாழ்கிறான். தமிழனை தலை நிமிர செய்த கலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்....
ponnusamy - chennai,இந்தியா
2010-10-17 11:32:35 IST
ஐயப்பன் என்ன கம்ப்ரிட் பல்கலைகழகத்தில் படித்த அதி மேதாவி சிதம்பரம் அவர்களை முட்டாள்களின் தலைவன் என்கிறாரா.அவர்தான் தி மு க வினரை விட இந்த திட்டம் சத்தியம் என்று மேடைக்கு மேடை முழங்கியவர்.அவர் இதை பற்றி இப்பொழுது என்ன கூறுகிறார் என்று எந்த பத்திரிகை நிருபராவது கேளுங்கப்பா.தமிழகத்தின் நம்பர் ஒன் சனநாயகவாதி அவர். தேர்தலில் தோல்வி அடைந்த போதும் வெற்றி பெற்றதாக அறிவிக்க செய்து அமைச்சராக வளம் வரும் வெட்கம் கெட்ட பொறம்ப்போக்கு. படித்த முட்டாள்....
மும்மாச்சி கணேசன் - கரூர்,இந்தியா
2010-10-17 11:28:08 IST
எல்லா அரசியல் வாதிகளும் போட்டி போட்டுகொண்டு இடத்தை வாங்குகிறார்கள். எனக்கு சொந்தமான 75 சென்டையும் சேத்து கம்பி வேலி போட்டு உள்ளார் உள்ளூர் அரசியல் வாதி, வாங்கி யுள்ள 200 ஏக்கர் போதாதா...
Daran - Chennai,இந்தியா
2010-10-17 11:20:57 IST
ப.சேகர்,கே.ஜீவிதன் ,பன்னாடை பாண்டியன் மற்றும் ராம் ,சிங்கப்பூர் ஆகிய அனைவரும் எழுதியிருப்பது மிக சரியானது. தி.மு.க போடும் அனைத்து திட்டமும் மக்களுக்கு தோல்வி தி.மு.கவுக்கு வெற்றி....
adalarasan - chennai,இந்தியா
2010-10-17 11:12:53 IST
உங்கள் ரேபோர்டில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை! எதிர்பார்த்ததுதான்! எல்லாமே தமிழ்நாட்டில் பெனாமிதன்! ! ஊழலில் ஊரிவிட்டனர்!இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது!கடவுளே வந்தாலும்! ஆடலரசன்...
ரங்கராஜன் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா
2010-10-17 11:04:18 IST
திரிபுரா ,மேகாலயா,அஸ்ஸாம் ஜ்ஹார்கன்ட் போன்ற மாநில அரசுகளோடு இந்த அரசு தொடர்பு கொண்டுள்ளதை அறியாத அறிவிலிகள் ஏகடியம் பேசு கிறார்கள்;;சரியான தகவல்கள் கோர பெற்றுள்ளதால் சரிபார்ப்பு நடை பெற்ற பின்பு வருவாய்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்க பெறும்;;சரியான பயனாளிகளை கண்டறிந்து தலா இரண்டு ஏக்கர் வீதம் எல்லா மாநிலங்களிலும் பிரித்து வழங்கப்படும் ;;பட்ட ,சிட்டா அடங்கல் போன்றவை முறையான விண்ணப்பங்கள் பெற்று விழா ஒன்று நடத்தி அந்தாந்த மாநிலங்களில் விரிவான ஏற்பாடுகளுடன் தரப்படும் ;அதுவும் அண்ணா பிறந்த நாளில் வழங்கப்படும்;;இவ்வளவு ஏற்பாடுகளை இந்த அரசு எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் செய்கிறது;;;எதிக்கட்சிகளின் ஏளனத்தையும் ,ஏகடியத்தையும் பொருட் படுத்தாமல் இந்த அரசு செயல் படும்;;;எனவே சில பத்திரிகைகள் எழுதியது போல் அல்லாமல் நமக்கு பெறும் வெற்றியே ;;;;;இவ்வாறு கருணாநிதி கூறும் நாள் எப்போது ?...
Vaithianathan - Muscat,ஓமன்
2010-10-17 10:39:05 IST
எங்கே போய்விட்டார்கள்.இந்த திமுக ஆதரவாளர்கள். கருத்து சொல்ல காணோம். சாயம் வெளுக்குது போலிருக்கு. இதுக்கு மேல மஞ்ச துண்டுக்கு வக்காலத்து வாங்க வருவானுங்களா. இவர்கள் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாமே இப்படிதான் சாயம் பூசி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்று வேலை. இனிமே எல்லாமே சாயம் வெளுக்க ஆரம்பிச்சிடும். பொறுத்திருந்து பார்ப்போம்....
vit - chennai,இந்தியா
2010-10-17 09:38:35 IST
any social organisation should file a case under RIGHT TO INFORMATION ACT. what a scandel is this????? public, please wake up! how many forms they are looting the state.....all the land given should be either taken back or should be given to actual farmers and it should be cultivated , should not be given for real estate business..........POLITICIANS! MIND THAT WHEN U DIE YOU ARE NOT GOING TO TAKE ANYTHING WITH YOU.......
முருகன் - chennai,இந்தியா
2010-10-17 08:43:33 IST
கருணாநிதி வோட்டுக்காக யார் நிலத்தையும் யாருக்கும் கொடுப்பார். தான் கொள்ளை யடித்து சேர்த்த குடும்ப சொத்தை பிரித்து கொடுப்பாரா ?...
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-17 07:18:17 IST
இந்த கருமம் புடிச்ச இலவச திட்டத்த அறிவிக்க வேணாம் னு என் தாத்தாகிட்ட சொன்னேன் அதுக்கு டேய் நீ சின்ன பையன் உனக்கு விவரம் பத்தாது இந்த மாறி பண்ணாட்டி கோடி கோடியா சம்பாரிச்சி நாம எப்டி கஞ்சி குடிக்கறதுன்னு சொன்னாரு...எனக்கு அப்பவே டவுட்டு இந்த இலவச திட்டம் விவசாயிக்கு இல்ல இது ஊற அடிச்சி உலையில போடுற திட்டம் னு....விவசாய கடன் னு ஒரு அறிக்கைய விட்டாரு யாராவது ஒரு விவசாயி பயன் அடைஞ்சத சொல்ல முடியுமா? விவசாய கடன் யார் யாருக்கு போச்சி தெரியுமா 10 ஏக்கர் 20 ஏக்கர் நிலம் வச்சிறந்த பெரிய பெரிய பண்ணையார் ட்ராக்டர் வாங்க லட்ச கணக்குல கடன் வாங்கினது தள்ளு படி ஆச்சி...அப்புறம் கூட்டுறவு வங்கியில 50 பவுன் 100 பவுன் அடமானம் வச்சிறந்த விவசாயி அல்லாத பணக்கார வர்க்கம் தான் பயன் அடஞ்சிது....மொத்தத்துல இந்த விவசாய திட்டம் பணக்காரர்களை மையமா வச்சி போட்டது இதுல அஞ்சி பைசாகூட பிரயோஜனம் கிடையாது எல்லாமே கண் துடிப்பு வித்தை....இந்த அநியாயத்த எந்த எதிர் கட்சியாவது( அ.தி.மு.க தவிர) கேட்குதா... யாரும் கேட்கறதே இல்ல... அதான் பெருசு இந்த ஆட்டம் போடுது...மக்களே திருந்தி தொலைங்க இந்த பாழா போன இலவசம் பின்னாடி போக வேணாம்......
2010-10-17 06:58:52 IST
இந்த திட்டம் கொண்டு வந்ததே கரை வேட்டிகள் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் புறம்போக்கு நிலத்தையும் பாதுகாக்கப்பட்ட காட்டு பகுதிகளையும் ஆட்டையை போடத்தான். இந்த பேய் ஆட்சி வந்த இரண்டு ஆண்டுகளில் எல்லா நிலங்களையும் நகரங்களிலும் கிராமங்களிலும் வளைத்து போட்டகிவிட்டது. எதிர்த்து யாரவது கேட்டால் அடி உதை தான். இந்த இத்து போன போலிசும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல இந்த காலிகளுக்கு உடந்தை. சில சிங்கப்பூர் முட்டாள்கள் இந்த அரக்க அட்ட்சியை ஆஹா....ஓஹோ...என்கிறார்கள். இவர்கள் இதயத்தை அடகு வைத்து விட்டார்கள்....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-10-17 06:01:23 IST
திமுக திட்டம் தீட்டுகிறது என்றால் அதில் தோல்வியே கிடையாது என்று வைத்துக்கொள்ளுங்கள். எனவே இங்கே வெற்றியா, தோல்வியா என்ற கேள்விகளுக்கு இடமே இல்லை. எல்லா திட்டங்களுமே "நமக்கு நாமே" திட்டங்கள் தான். வெற்றி தி மு க காரர்களுக்கு. இதில் சந்தேகமே இல்லை. திட்டத்தின் உண்மையான பலன் அவர்களுக்கு தான்....
மீனா - சிகாகோ,இந்தியா
2010-10-17 04:14:00 IST
உலகம் ஊன்மை என்னும் பிடியில் இருந்து தகர்த்து விட்டது. நீதிக்காக வாழ்ந்த சோழர்கள் ஆரூரில் அரசு செய்த காலம் ஓன்று கதை தான்! இன்றைய அரசியல் வாதிகள் எத்தனைதான் சுரட்டினாலும், எடுத்துகொண்டு செல்வது உடலை கூட இல்லை. உயிரே நீ உண்மையை உணர்வது எப்போது! ரமணர் போன்ற ஞானிகள் நான் யார் என்று உபதேசம் செய்தது எல்லாம் வீணே!...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-17 02:04:32 IST
வாய் சொல்லிலே வீரர்கள் இந்த திமுக வினர். இந்த திட்டத்தை அமல்படுத்த போவதை மஞ்ச துண்டு சொன்னபோது அம்மா அவர்கள் இந்தத் திட்டத்திற்கு "போதுமான" நிலம் கிடையாது..எப்படி இவர்கள் தரமுடியும் என்று புள்ளிவிவரத்தோடு சொன்ன பொது அம்மாவை "குதறி"..கேவலமாய் பேசினார்கள். இப்போ அப்பனை போன்றே திமிராய் பேசும் ஸ்டாலினும் வாய் கிழிய சொன்னார்..நாங்கள் சொன்னதையும் சொல்லாத்ததியும் செய்வோம் என்றார். எங்கே போய் இப்போ முகத்தை வைத்துகொள்வார்களோ தெரியவில்லை. ஒருவேளை "நிலவிலே" இடம் தேட அஞ்சா நெஞ்சுவை அனுப்பி வைப்பார்களோ? இலவசம் என்று சொல்லி ஆசை காட்டி "ஒட்டு" பொறுக்கிகள் இவர்கள். கட்டாத பாலத்திற்கும், போடாத ரோட்டுக்கும் போட்டதாய் சொல்லி "லஞ்சத்தில்" புரண்டவர்கள்தானே இவர்கள். பொய்கணக்கை புனைவதிலே இவர்களுக்கு சொல்லியா தரவேண்டும்? விஞ்ஞான ஊழல் பேர்வழிகள் என்று "உலகிலேயே" கேவலமான பட்டத்தை பெற்ற ஒரே ஒரு கட்சி என்றால் இந்த திமுகவினர்தான். அடுத்த தேர்தல் அறிக்கையிலே "நிலவிலே" அல்லது "செவ்வாய் கிரகத்திலே" இலவசமாய் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாய் சொன்னால் "கேட்கும்" கே.பய..ஆஹா ஓஹோ என்று இலவச ஒட்டு போட்டு வருவார்கள் என்று இவர்களும் நம்பிக்கையோடு இருப்பார்கள்..இவர்கள் நம்பிக்கையிலே விழப்போவது "புழலில்" ஓரிடம் என்பதாய் இருக்கும் என்பதே நிஜம்.....
எ அயப்பன் - delhi,இந்தியா
2010-10-17 00:30:49 IST
நடைமுறைக்கு சாத்தியமில்லாத முட்டாள்தனமான திட்டம்...

கருத்துகள் இல்லை: