திங்கள், 18 அக்டோபர், 2010

அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்: ஜெ. ஆவேசப்பேச்சு



மதுரை அதிமுக கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஜெயலலிதா வரக்கூடாது; அப்படி வந்தால் குண்டுகள் வீசி கொல்வோம் என்று 16 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததாக அதிமுக தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து 3ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.  3
லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் இந்த கூட்டத்தில் மிரட்டல் கடிதங்கள் குறித்து ஆவேசமாக பேசினார்.
அவர்,  ‘’ மிரட்டல் கடிதங்கள் அனுப்பினால் பொதுமக்கள் வரமாட்டார்கள் என்று கணக்கு போட்டார்.   இங்கு கூடியிருக்கும் கூட்டம் அழகிரியின் கணக்கை தவிடு பொடியாக்கிவிட்டார்கள்.
அனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன்.  அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார்.  அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார்.  இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி
ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.

அஞ்சா  நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்.  எதிர்கொள்கிற துணிச்சல் ஏன் இல்லை.  இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டப்பெயர்
வேறு.

பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.  நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி
ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.

மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம்.  மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
இப்படிப்பட்டவர் விடுக்கும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை.

அஞ்சா நெஞ்சன்! யார் கொடுத்தது இந்த பட்டம்.  இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார் என்று உங்கள் யூகத்திற்கே
விட்டுவிடுகிறேன்.

இப்படிப்பட்டவர் மிரட்டல்களூக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.  யார் அஞ்சுகிறார்கள் யார் அஞ்சவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும். 

ஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள்.  மரணம் ஒருமுறைதான் வரும்.  அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.
அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: