ஞாயிறு, 4 ஜூன், 2017

நீதித்துறையில் 70 வீத உயர்பதவிகளை 132 குடும்பங்களே தலைமுறை தலைமுறையாக...

Shalin Maria Lawrence:   RSS இன் அறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் படித்த நீதிபதி மகேஷ் சந்திர சர்மா அவர்கள் நேற்று மயிலின் புனிதத்தன்மையை பறைசாற்றிய பிறகு நாமெல்லாம் முகநூலிலும் ,ட்விட்டரிலும் கிண்டல் போரில் ஈடுபட ,வேறு சில சான்றோர்கள் கீழே படத்தில் உள்ளதுபோல பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் . அதில் அதிக சான்றோர்கள் அம்பேத்கரையும் ,இடஒதுக்கீடையும் திட்டி ,இட ஒதுக்கீட்டில் வந்த நீதிபதிகளால் தான் நீதித்துறை இப்படி அறிவில்லாமல் பேசிக்கொண்டிருந்தது என்று சலித்து கொள்கிறார்கள் .
இங்கே இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ளுதல் அவசியம்
1 . சர்மா என்றும் முடியும் பெயர் கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது கூட தங்களை தாங்களே அறிவாளிகள் என்று சொல்லி கொள்ளும் சமூகம் அறிந்திருக்க வில்லை என்பது வேதனையயை அளிக்கிறது .
2 . நீதித்துறையில் இடஒதுக்கீடு இல்லை என்பது கூட தெரியாத "மெரிட் " குரூப்புகள் அறிவு மாட்டின் மடியில் சிக்கி கொண்டிருப்பது தெளிவாகிறது .
இட ஒதுக்கீடால் தான் நாடு நாசமாய் போய் கொண்டிருக்கிறது ,மெரிட்டில் இருப்பவர்களின் வாய்ப்பை பிடுங்கி கொண்டுவிட்டார்கள் என்று பேசி திரியும் இந்த பதர்கள் பெரும்பான்மையாக நிறைந்திருக்கும் நீதித்துறை சிரிப்பாய் சிரிக்கிறது .

அப்படியே இடஒதுக்கீடு இல்லாத இடத்தில இவர்கள் கிழித்த கிழி வாய் பிளக்க வைக்கிறது .
இந்திய நீதித்துறையின் 70 சதவிகிதம் உயர்பதவிகளை 132 குடும்பங்களை சார்ந்தவர்களே தலைமுறை தலைமுறையாக ஆக்கிரமித்து வருகிறாரகள் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்லுகிறது .திரும்ப திரும்ப ஒரே ஜாதி மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த உயர் பதவிகள் சென்றடைகிறது என்று இந்த அறிக்கை ஆதாரத்துடன் சுட்டி காட்டுகிறது . இந்த துறையில் காலம்காலமாக பெருன்பான்மை ஒதுக்கீடு கிடைத்த இந்த மெரிட் குரூப்புகள் அறிவு திறன் மேல்சொன்னவாறு இருக்க இடஒதுக்கீட்டை இழிவாக பேச இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?
பெரும்பான்மையாக இவர்கள் நிறைந்திருக்கும் துறையிலேயே முக்கிய பிரச்சனைகளுக்கு இவர்கள் கிழித்த கிழி ஊர் அறிந்தது .சனாதன அதர்மம் ,மனு அதர்மத்தின் வழி வந்தவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நீதி துறையில் நீதி எவ்வாறு கிடைக்கும் ?
நேற்றைய நிகழ்வு மற்றும் முன்நடந்த விஷயங்களை பார்க்கும்போது 'equal representation ' அதாவது சம பிரதிநிதித்துவம்
இல்லாத நிதித்துறையால் எப்படி பெண்கள் ,பிற்படுத்தப்பட்டோர் ,பட்டியலினத்தாருக்கு சாதகமான நீதியை வழங்க முடியும் ?
Image may contain: 1 person, text ஆக நீதித்துறையில் இட ஒதுக்கீடு என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிறது .
மெரிட்டில் முன்னேறி உயர்பதவியை அடைந்த நீதிபதி கர்ணன் எப்படி பட்ட ஜாதிய தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே .அப்படி இருக்கும் பட்சத்தில் நீதி துறையில் இட ஒதுக்கீடு என்பது இன்றியமையாததாகிறது .
Shalin<

கருத்துகள் இல்லை: