ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

நெல்லை மாணவி தனலட்சுமி .... மற்றுமொரு நீட் தற்கொலை !

தினகரன் : நெல்லை: நெல்லையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த ஆட்டோ டிரைவர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லை தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செல்வராஜ் (48).   இவரது மகள் தனலட்சுமி (18), பாளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 முடித்துள்ளார். மருத்துவம் படித்து டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த இவர், வீட்டில்
இருந்தபடியே படித்து நீட் தேர்வு எழுதினார். இந்நிலையில் நீட் தேர்வில் மாணவி தனலட்சுமி, குறைந்த மதிப்பெண்களே பெற்றார். இதனால் அவரது மருத்துவப்படிப்பு கனவு கலைந்தது. இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர், மேற்படிப்பு எதிலும் சேராமல் கடந்த 2 மாதங்களாக வீட்டில் சோகமாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் பகலில் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


தற்கொலை செய்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவப் படிப்பிற்கு செல்ல முடியாமல் போனது. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். ‘நான் மருத்துவ படிப்பு படித்து டாக்டராகி விட்டால் எனக்கு கிடைக்கும் மரியாதையே தனி’ என்று  எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். படித்து முடித்து டாக்டர் கனவில் இருந்த மாணவி நீட் தேர்வின் முடிவால் தற்கொலை செய்து கொண்டதை எண்ணி குடும்பத்தினர், அக்கம், பக்கத்தினர் கண்ணீர் விட்டனர். மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ஊருடையான்குடியிருப்பு பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியது. நீட் தேர்வு தோல்வி விரக்தியில் ஏற்கனவே 6 மாணவிகள் தற்கொலை செய்து பலியான நிலையில் தனலட்சுமியுடன் சேர்த்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள

கருத்துகள் இல்லை: