செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

இந்திய அரசு ஐ நாவிடம் அளித்த விளக்கம் : சட்டத்திற்கு கட்டுப்பட்டே 370 ஐ நீக்கி உள்ளோம்

 Shyamsundar tamiloneidndia : டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டது குறித்தும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தது குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு விளக்கம் அளித்துள்ளது.
இத்தனை வருடங்களாக நீடித்து வந்த காஷ்மீர் பிரச்சனையில் நேற்று அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாகி பிரிப்பதாக அறிவித்துள்ளது. விளக்கம் விளக்கம் இந்த நிலையில் காஷ்மீரில் செய்யப்பட்ட இந்த இரண்டு அதிரடி மாற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு விளக்கம் அளித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இவர்களிடம் இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


 அந்த விளக்கத்தில், சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட சட்டம். காஷ்மீரில் நிலவிய பிரச்சனையை மையமாக வைத்து இந்த சட்டம் அப்போது தற்காலிமாக காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்தது. தற்போது அதை நீக்கி இருக்கிறோம். 70 வருடங்கள் கழித்துதான் இந்த சட்டத்தை நாங்கள் நீக்கி இருக்கிறோம்.

சட்டத்திற்கு கட்டுப்பட்டே இதை நீக்கி உள்ளோம். காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. 370 சட்டப்பிரிவின் 3ம் பகுதி இந்த சக்தியை அவருக்கு அளிக்கிறது. அதனால் அவர் இந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கியதில் எந்த விதமான அதிகார மீறலும் இல்லை. அவர் எப்போது நினைத்தாலும் இதை நீக்க முடியும்.

இத்தனை வருடங்கள் காஷ்மீரை வளர விடாமல் இந்த சட்டம் தடுத்தது. முக்கியமாக காஷ்மீர் மக்கள் முன்னேற கூடாது. காஷ்மீர் பெண்கள் முன்னேற கூடாது என்று இந்த சட்டம் கட்டுப்பாடுகள் போட்டது. தற்போது அதை நீக்கி உள்ளோம். இது காஷ்மீரின் வளர்ச்சிக்கு இனி உதவும் என்று, இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: