வியாழன், 8 ஆகஸ்ட், 2019

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நான் எம்.பி. ஆகவில்லை - வைகோ ஆவேசம்

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நான் எம்.பி. ஆகவில்லை - வைகோ ஆவேசம்மாலைமலர் : காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நான் எம்பி ஆகவில்லை என மதிமுக தலைவர் வைகோ ஆவேசமாக தெரிவித்தார்.
 சென்னை: காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரசை குறை சொல்வதா? என மதிமுக தலைவர் வைகோவுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, அரசியல் நாகரீகம் இன்றி காங்கிரசை விமர்சித்துள்ளார்.
காஷ்மிர் விவகாரத்தில் அண்ணாவின் வழியில் வந்ததாக கூறுகிற வைகோ, கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைவர் வைகோ, காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்களால் நான் எம்.பி ஆகவில்லை என ஆவேசமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:< ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தான் நான் எம்.பி. ஆனேன். ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி. ஆனதும் கருணாநிதி தயவால்தான்.


காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு, என்மீதான வன்மத்தால் கே.எஸ்.அழகிரி இதுபோன்று பேசுகிறார்.

காஷ்மீர் மசோதாவின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர் வாக்களிக்கவில்லை; அவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் வாங்கி விட்டார்களா? இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்.பி.யாக நான் போனதில்லை.

பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து தவறை சுட்டிக்காட்டும் தைரியம் உள்ளவன் நான் என தெரிவித்துள்ளா
 தார்.

கருத்துகள் இல்லை: