tamil.oneindia.com - vishnu-priya.:
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம் என தமிழக
காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ்தான் என மாநிலங்களவயில் நடந்த விவாதத்தில் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதை காங்கிரஸ் கட்சி கண்டித்தது. வைகோவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை என கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக வைகோ பேசுகையில் இனத்தை அழித்த பாவிகளின் தயவில் நான் எம்பியாக மாட்டேன்.
என்னை எம்பியாக்கியது திமுக எம்எல்ஏக்களும் ஸ்டாலினும்தான் என காட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி கூறுகையில் காங்கிரஸ் தயவால் எம்பியானார் என ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தெரிவித்தார்.
நாங்கழ் வைகோவை நிறுத்தக் கூடாது என கூறியிருந்தால் ஸ்டாலின் நிச்சயம் அவருக்கு சீட் வழங்கியிருக்க மாட்டார். வைகோவுக்கு எம்பி பதவி கொடுக்க காங்கிரஸ் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைகோவுக்காக மறைமுகமாக வாக்களித்தனர்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம்.
போர் நின்றுவிடும், நல்லது நடக்கும் என தவறான தகவல்களை பிரபாகரனிடம் வைகோ அளித்து வந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டது அனைவருக்கும் தெரியும்.
ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என கொள்கை அமைத்து கொடுத்தது காங்கிரஸ் என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக