ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

பொதுக்கல்வி முறையயை நீக்கி விட்டு .. ஜாதிகேற்ற கல்வி முறையை மீண்டும் ..?

சுமதி விஜயகுமார் : இந்தியாவில் மூன்றெழுத்து மிக பிரபலம். குறிப்பாக
இதுதான் என்றில்லை. நிறைய பிரபலமான எழுத்துக்கள் மூன்றெழுத்து தான். அதில் பல எனக்கு பிடித்தமானவை கூட. ஆனால் தற்பொழுது இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று மூன்றெழுத்துக்கள் நம் நாட்டின் எதிர்காலத்தை அடியோடு மாற்றிவிட கூடியதாய் மிக மிக அச்சத்தையும் கவலையையும் விதைக்கிறது.
NEP (National Education Policy)
NIA (National Investigation Agency)
EWS (Economically Weaker Section)
இந்திய வரலாற்றில் அனைவருக்குமான பொது கல்வி என்பது ஆங்கிலேயே ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இன்று whatsapp குழுக்களில் நமக்கு பரப்பப்படும் 'ஆங்கிலேயர்கள் நம்மை அடிமை படுத்த கொண்டுவந்தது தான் கல்வி திட்டம். அதனை இன்னும் பின்பற்றி கொண்டிருக்கிறோம்' என்ற செய்தியின் நீட்சி தான் NEP என்ற புதிய கல்வி கொள்கை வரைவுத்திட்டம். Macaulay என்ற ஆங்கிலேயரின் கல்வி வரைவு கொள்கையை தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். அவர் கொண்டு வந்த கல்வி முறைக்கு முன் என்ன விதமான கல்வி முறை இருந்தது என்றும் அது யாருக்கான கல்வியாக இருந்தது என்பதும் உங்கள் வீட்டில் இருக்கும் பாட்டி, தாத்தாவிடமோ அல்லது கூகிளில் தேடி பார்த்தோ தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகமெல்லாம் இல்லை வெறும் 4 தலைமுறைகளாகத்தான் இந்த பொது கல்வி முறையை இந்தியா பின்பற்றி வருகிறது. அதில் பயன்பெற்றவர்கள் வெறும் 2 தலைமுறையினர்தான். இன்று பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் 5ஆம் தலைமுறை. இந்த கல்வி என்பது பள்ளிப்படிப்போடு அவர்களுக்கு முடியப்போகிறது. மருத்துவ கல்விக்கு நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முன்பு காட்டு கத்தலாய் ஒரு கூட்டம் கத்தி கொண்டிருந்தது. அதில் தலைசிறந்த மருத்துவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அடக்கம். அந்த கூச்சலின் வீரியம் தெரிய முதல் பலி தேவைப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நம் பிள்ளைகளை இழந்து கொண்டிருக்கிறோம். இந்த வருடம் இன்னும் கூடுதலாய் நீட்டில் தேர்வாகியும் மருத்துவ கலந்தாய்வுக்கு அழைப்பு இல்லாததால் ஒரு பிள்ளையை இழந்துள்ளோம். இனி அப்படி எல்லாம் இருக்க கூடாது என்று இந்த NEP கொண்டு வந்திருக்கிறது மைய அரசு.
இந்த நீட் தேர்வை மருத்துவ கல்வி என்பதை தாண்டி இனி அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் கொண்டு வரப்போகிறது. அப்போது பிள்ளைகளின் பலி அதிகம் தானே ஆகும் அரசு எப்படி இதன் மூலம் தடுத்து நிறுத்த போகிறது என்பதை இந்த NEP தெளிவாய் விளக்குகிறது. இந்த புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்துவதுன் மூலம் இனி குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர்வதே கடினம். Macaulay கல்வியை குறைகூறும் இவர்கள் தான் இனி கல்வி என்பது ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கும் சாத்தியம் மிக மிக குறைவு. இந்த சமூகத்தை சேர்ந்த பணக்கார குழந்தைகள் வேண்டுமானால் படிக்கலாம்.
அது என்ன எப்போ பாரு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட சமூகத்தை பற்றிமட்டுமே பேசுகுறீர்கள், forward casteல் பிறந்து ஏழையாய் இருக்கும் பலரை எங்களுக்கு தெரியும் அவர்களை பற்றி கவலைப்படமாடீர்களா என்று யாரேனும் கேட்டால், ஏன் அவர்களை பற்றி கவலை கொள்வதில்லை என்பதை அரசு கொண்டு வந்திருக்கும் EWS திட்டத்தை பார்த்தால் தெரியும்.
அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடஒதுக்கீடை கொண்டு வருகையில் அதில் economically backward என்பதை சேர்க்க வேண்டும் என்ற வாதம் எழுந்தது. இடஒதுக்கீட்டில் ஏன் வறுமையை சேர்க்க கூடாது என்பதற்கு அம்பேத்கர் செய்த விவாதம் மிக முக்கியமானது. இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை. சம உரிமை மறுக்கப்பட்டோர்க்கு அதை பெற்றுத்தருவது தான் இடஒதுக்கீடு. இப்போது அந்த இடஒதுக்கீட்டில் SC ,ST MBC, OBC என்பது கூட கொண்டு வரப்பட்டது தான் இந்த EWS. அதாவது பிரபலம் இல்லாத கோவில்களில் அர்ச்சகராக இருக்கும் ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட சட்டம். நியாயம் தானே. அவர்களும் பாவம்தானே என்று தோன்றினால் அடுத்த வரி அந்த எண்ணத்தை மாற்றும்.
சில தினங்களுக்கு முன்பு SBI கிளெர்க் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தகுதி பெரும் cut off மதிப்பெண்கள் விளக்கும் இது எவ்வளவு பெரிய மோசடி என்று. SC பிரிவினருக்கு 61.25, STக்கு 53.75. EWS என்னும் ஏழைகளுக்கு cut off வெறும் 28.5. Reservationணால் தகுதி திறமை பறிபோய் விட்டது என்றவர்கள் யாரும் , பாஸ் மார்க்கே 35 அதை விட குறைவான cut off மதிப்பெண்கள் என்றால் அவருக்கு தகுதியும் திறமையும் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கவே இல்லை. இவர்கள் இப்போதில்லை மெக்காலே கல்வி திட்டத்தில் இருந்த பாஸ் மார்க் எடுக்க முடியவில்லை பாஸ் மார்க்கை கொஞ்சம் குறையுங்கள் என்று கெஞ்சியவர்கள் தான்.
இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டால் இருக்கவே இருக்கிறது NIA . சுருங்க சொன்னால் எந்த ஒரு தனி மனிதரையும் தீவிரவாதி என்று அறிவித்து அவரை சிறையில் அடைப்பது. அதாவது எதிர்காலத்தில் நான் இது போல் அரசு திட்டங்களுக்கு எதிராக பதிவு எழுதினால் என்னையும் தீவிரவாதியாக இந்த அரசு அறிவிக்க முடியும்.
ஒருமுறை என் கணவர் ஒரு ஜெர்மனியரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஹிட்லரை பற்றி கேட்டிருக்கிறார். அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்த அந்த நபர் ' ஜெர்மனி என்றால் உங்களுக்கு வேறு எதுவுமே தோன்றாதா ' என்று சற்று கடுமையாகவே கேட்டுள்ளார். எதிர்காலத்தில் நம்மிடம் வெளிநாட்டவர்கள் கேட்பார்கள் 'உங்கள் ஊரில் மாட்டு கறி சாப்பிட்டால் அடித்தே கொன்று விடுவீர்களாமே?' என்று. அதற்கான பதிலை இப்போதே தேட துவங்குங்கள்.
உலகில் பாதி அளவை வென்றெடுத்த ஹிட்லரின் முடிவு நாம் அறிந்ததே. அது போல் இந்த அரசும் ஒரு நாள் அந்த முடிவை எட்டும். அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் இன்றில் இருந்து அந்த நாள் வரை நாம் இழக்க போகும் உரிமைகளும் உயிர்களும் எத்தனை என்பது தான் இப்போது நம் முன் அச்சுறுத்தும் கேள்வி.

 
Mahendran Velu  :  மதிப்பிற்குரிய சகோதரி வணக்கம்
தங்களின் பதிவில் உள்ள எதையும் எளிதில் கடக்க முடியாது.
அனைத்து ம் நடுத்தர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை யின் ஆதாரங்கள் சுருட்டி எடுக்க ம் வேட தாரிகள் பார்ப்பனர் சூழ்ச்சி. அவர்கள் சூழ்ச்சியை கீழ் கண்ட NEP
2019, NIA
NEET , NEXT . இனங்களில்
நம்மை 97% ஐ 3% அழிக்க
நினைக்கிறது .

இந்த முட்டாள்கள்
கூட்டம் 2014 ல் இருந்து ஆட்சியில் உள்ளவர். பொருளாதார சரிந்து கொண்டு உள்ளது.
வேலைவாய்ப்பு
இல்லை. மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
விவசாயத்தை அழித்துவிட்டு அவர்கள் வேடிக்கை பார்க்கிறது.
நாட்டின் எந்த முக்கியமான பகுதி ஆபத்து
நெருங்கி வருகிறது.
அழிவுகளை எண்ண முடியாது

இந்த சூழ்நிலையில் இந்த மாற்றத்தை
எந்த முட்டாள் கூட செய்ய செய்ய மாட்டார்கள்.
பிறகு ஏன் இந்த மக்களை நாட்டை
குழப்புகிறார் கள்

இனி மக்கள் ஒன்று இணைந்து எதிர் பை காட்டி நமது கல்வி மெக்காலே
வழியில் செல்ல
ஆயத்தமாக வேண்டும்

கருத்துகள் இல்லை: