தினமணி :
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: காஷ்மீர் சட்டப்பேரவையில் தேசியக்கொடி ஏற்றம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து
செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவையில், தேசியக்கொடி
ஏற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான
தீர்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும்
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவை மக்களவையில்
செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.
ஏற்கெனவே இந்தத் தீர்மானமும், மசோதாவும்
மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுவிட்டன. எனவே, அவற்றுக்கு
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.
இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவை கட்டடத்தில், காஷ்மீர் மாநில கொடியுடன், இந்திய தேசியக்கொடியும் ஏற்றப்பட்டுள்ளது
இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவை கட்டடத்தில், காஷ்மீர் மாநில கொடியுடன், இந்திய தேசியக்கொடியும் ஏற்றப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக