கொலைத் திட்டம் போடும் கோழைகளே ஒரு போதும் எனது குரலை ஒடுக்க முடியாது!
சங்-பரிவாரங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
பெங்களூரு, ஜூன் 28-
சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், கடந்த 2017-ஆம்ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, பெங்களூருராஜராஜேஸ்வரி நகரிலுள்ள அவரது வீட்டு முன்பே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் முழங்கினர். நண்பர்என்ற அடிப்படையில், கவுரி லங்கேஷ் மரணம், நடிகர் பிரகாஷ் ராஜையும் கடுமையாகபாதித்தது. அப்போதிருந்து, கவுரியை கொன்று சாய்த்த மதவெறிக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் உரக்கக் குரல் எழுப்பி வருகிறார். குறிப்பாக, ஆர்எஸ்எஸ், பாஜக-வின் வெறுப்பரசியலைக் கடுமையாகச் சாடி வருகிறார். கர்நாடகத் தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனிடையே, கவுரி கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் நவீன் குமார், அமித் தெக்வெக்கர், பரசுராம்வாக்மோர் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையில், நடிகர்கள் கிரிஷ் கர்னாட், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரையும் கொலை செய்வதற்கு இவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. ‘ஆபரேசன் காகா’ என்றுசதித் திட்டத்திற்கு பெயரும் சூட்டியிருந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், ‘பெங்களூருவில் முற்போக்குச் சிந்தனையாளர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை திட்டமிட்டுக் கொலை செய்தவர்கள், என்னையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்; சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கூறுகிறது; என்னுடைய குரலை ஒடுக்கும் வகையிலான மிரட்டல் இது; ஆனால், இப்படி மிரட்டல்கள் வரும்போது, என் குரல்மேலும் வலிமைபெறும்’ என்று கூறியுள்ள பிரகாஷ் ராஜ், ‘கோழைகளே, நீங்கள் இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப்போகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக