சனி, 30 ஜூன், 2018

நிக்ஹா ஹலாலா தடைசெய்யப்படுகிறது ... மணமுறிவு பெற்ற பெண் மீண்டும் கணவனோடு சேர வேறு ஒருவரோடு ...

இஸ்லாமியர்களின் பலதார மணமுறையும் சட்ட விரோதமாகிறது!மின்னம்பலம்: இஸ்லாமியரின் மூன்று முறை தலாக் கூறி விவாகாரத்து செய்யும் முறையைச் சட்ட விரோதமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதைப் போன்று நிக்ஹா ஹலாலா முறையையும் பலதார மணமுறையையும் சட்ட விரோதமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
இஸ்லாமியரின் மதப்படி, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற முடியும். மத்திய அரசு, தலாக் முறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி அதைக் குற்றச்செயலாக்குவதற்கான மசோதாவைக் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. ஆனால் அது மாநிலங்களவையில் கடுமையான எதிர்ப்புக்குள்ளானதால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது இஸ்லாமியரின் இன்னொரு முறையான நிக்ஹா ஹலாலா எனப்படும் பலதார மணமுறையையும் ரத்து செய்து அதையும் சட்டவிரோதமாக்க முயற்சித்துவருகிறது.

நிக்ஹா ஹலாலா முறை என்பது விவகாரத்து பெற்ற தம்பதியினர் மறுபடியும் மறுமணம் செய்துகொள்ள முடியாது. தம்பதியினரில் முதலில் பெண் இன்னொரு ஆணை மறுமணம் செய்துகொள்ள வேண்டும். அந்த புதிய திருமணத்தை விவாகரத்து செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னரே மறுபடியும் முந்தைய கணவரையோ அல்லது மனைவியையோ மறுமணம் செய்துகொள்ள முடியும்.
இந்தப் பலதார மணமுறைக்குப் பெண்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது. இது மிகவும் சர்ச்சைக்குரிய நடைமுறை, இதை அரசியல் சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் .பலதார மணமுறையும் பெண்களுக்கு எதிரானது என்றும் கூறி பெண்கள் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. இந்த நடைமுறையை குற்றச்செயலாக்க வேண்டும் என்று அவர்கள் வழக்கில் கோரியுள்ளனர்.. மத்திய அரசு இந்த வழக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தலாக் முறை விவகாரத்து சட்ட விரோதமானது, அது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ராஜ்ய சபாவில் அந்த மசோதா எதிர்க்கட்சியினரால் கடுமையான எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டதால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது நிக்ஹா ஹலாலா முறையையும் பலதார முறையையும் சட்ட விரோதமாக்கி அதைச் செல்லாது என அறிவிக்க அரசு முயற்சித்துவருகிறது.

கருத்துகள் இல்லை: