ஞாயிறு, 24 ஜூன், 2018

மதவெறியர்களின் கைப்பாவையின் ஆட்சியை .. ஏன் இன்னும் விரட்டாமல் ?

ஆலஞ்சியார் : அரசியலில் எதிரி எதை நகர்த்துகிறோனே அதன்படியே
எதிர்வினை தேவைபடும்..
களம் தெளிவாக இருக்கிறது பகை யாரென்று தெரிகிறது .. பகைவர் நேர்நிற்க பயந்து சில அடிமைகளை முன் நிறுத்துகிறார்கள் ..சொல்படி ஆடும் குரங்கைப்போல குட்டிகரணம் போடுகிறார்கள் எங்கிருந்து இயக்கபடுகிறதென தெளிவாய் தெரிகிறது.. அவர்களின் இயக்கத்திற்கேற்ப இங்கே நாடகம் நடக்கிறது....
நாம் மட்டும் நேர்மை பேசி திரிகிறோம்.. கொஞ்சமேனும் அரசியல் நேர்மயோடு நடப்பவரோடு .. ஜனநாயக மரபுகளை மதிக்க தெரியாமல்.. தான் தோன்றித்தனமாக என்ன பேசுகிறோம் என்றறியாமல் வார்த்தைகளில் விசம் தடவி வீச்சுகிற கயவர் கூட்டத்தை .. வாசலில் நின்று போரிடலாமென காத்திருக்கிறோம் .. அவன் புறவாசல் வழியே நம் புறமுதுகை குறிபார்த்து அம்பு எய்கிறான்.. இப்போதும் நாம் நேர்மை பேசுவோம்.. ..
தன்னிகரில்லா தலைவனை வசைபாடிய போதே நாவறுத்து வீசியிருந்தால் .. அல்லது நாவடக்க செய்திருந்தால் அடுத்த முறை பேச அச்சம் கொள்வான்.. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கொச்சையாய் பேசுவதும்.. அரசியலென்ற பெயரில் நம்மை அம்மணமாக்கி சிரிக்கிற போதும் நாம் நேர்மை தவறாமல் களம் காண்போம்..

அதீத நேர்மை அரசியலுக்கு உதவாது ..
நாம் 2018 அரசியல் செய்கிறோம்.. இங்கே கருத்தில்லாதவன்.. அறிவின் வறட்சியில் சொல்லின் பொருளறியாது ..வாய்க்கு வந்ததை பேசி திரியும் போதும் ..நாம் வாய்மையை போற்றி நின்றால் .. நாம் பைத்தியக்காரன் பட்டம் வாங்க வேண்டிவரும்.. மக்களை துன்புறுத்துகிற .. மக்களை தினம் தினம் கொல்கிற.. மக்களை சித்ரவதை செய்கிற .. மக்கள் விரும்பாத ஆட்சியை.. மக்கள் வாக்களிக்காத ஆட்சியை..
கட்டிவச்ச காசை கூட திரும்ப பெற முடியாமல் செவிட்டில் அறைந்து விரட்டபட்ட மதவெறியர்களின் கைப்பாவையின் ஆட்சியை .. ஏன் இன்னும் விரட்டாமல் பார்வையாளராக இருக்கிறாரென நம்மை பார்த்து மக்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள் ..
காரணம் அந்தளவு நொந்துப் போய்விட்டார்கள்.. பாசிசத்தின் கோரப்பிடியில் மக்கள் சிக்குண்டு இருக்கும் போதும் நாம் நேர்மை பற்றி பேசி நேரான வழியில் வரவேண்டுமென என்னும் உயர்ந்த எண்ணம் நம்மை மக்கள் முன் கேலிப்பொருளாக்கி விடுமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது..
..
எந்த வாசலில் எந்த ஆட்டத்தை ஆடவேண்டுமென அறிந்திருக்கிற வேண்டும் இல்லையெனில் ஆட்டம் தெரியாதவரென எண்ணுவார்கள் .. காலதாமதமும் அதீத நேர்மையும் தற்கால அரசியலுக்கு வேண்டாதவைகள் .. அரசியலில் நேர்மை முக்கியம் .. அது நேர்மையானவரோடு மோதுகிற போது மட்டுமே.. சூழ்ச்சிவலைப்பின்னி. சூதுவால் நம்மை வீழ்த்த நினைக்குமம கபடதாரிகளுக்கு அவர்கள் மொழியில் வழியில் பதில் சொல்வதே சரி .. இவர்கள் அரசியல் செய்ய வரவில்லை மக்கள் பணி செய்யும் மாண்பு அறிந்திடாதவர்கள்.. இனம் மொழி கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை .. நம்மவர்களை கொண்டே நடத்தும் நயவஞ்ச தந்திரமிக்கவர்.. நோக்கம் தங்கள் இனத்தவனின் மேம்பாடு மட்டுமே அதற்காக எதையும் செய்வார்கள் பேசுவார்கள்.
..
நம்மிடம் நெஞ்சுறுதி உண்டு நேர்மை உண்டு வாய்மை உண்டு ..எனினும் அதை இவர்களிடம் எதிர்பார்ப்பது நமது அறியாமை
எதிரியே என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை தீர்மானிக்கிறான்..
..
இனி.. எதிரி நிலைகுலைய செய்யும் ஆட்டம் மட்டுமே தேவை.. இலக்கணம் மீறியதாக இருப்பினும்.. ஆம்
ஆடவேண்டிய நேரத்தில் ஆடவேண்டும்..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: