வியாழன், 28 ஜூன், 2018

தோழர் டில்லிபாபு கைது ஒரு மோசமான மனித உரிமை மீறல் ...

Chinniah Kasi : தோழர். பாலபாரதி ( Bala Bharathi ) அவர்களின் பதிவில் அரூர்
தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். டில்லிபாபுவை காவல்துறையினர் கைது செய்தபோது நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்திருக்கிறார். இந்த கண்டனத்தின் வாசகங்கள் உள்ளபடியே நெஞ்சை கொதிக்கவைக்கும் வாசகங்கள்..ஒரு எளிய மக்கள் ஊழியனை காவல்துறை நாட்டுமிராண்டிகள் நடத்தியவிதத்தை ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டும்
இதை கண்டிக்கவில்லை எனில், இந்த சமூகத்திற்காக தன்னை அர்பணித்துக்கொண்டுள்ள ஒரு மக்கள் ஊழியனை அவர் வாழ்நாளிலே அவமதிக்கிறோம் என்று பொருள்!
பிரதாபன் ஜெயராமன் :இதோ தோழரின் பதிவு..... "நம் பூர்வீக பழங்குடியின சமூகத்தில்பிறந்து, வறுமைக்கு மத்தியில் கல்விகற்று
அதே வறுமை சமூகத்திலிருந்து
அகற்றப்படவேண்டும் என்பதற்காக மார்க்ஸியத்தை கொள்கையாக ஏற்று
பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் மாதம் ஏழாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாகபெற்று

எவரொருவரும் வீம்புக்காகவாவது விரல்நீட்டி விமர்சனம் செய்யமுடியாத அளவிற்கு அப்பழுக்கற்ற நேர்மையை கடைபிடித்து மக்கள் ஊழியராகத்திகழும்
ஒருசிறந்த போராளியான தோழர் டெல்லிபாபு அவர்களை குறைந்தபட்ச நாகரிகம்கூட பேணாத
காவல்துறை DSp கடுமையாகத் தாக்கியதை வன்மையாக கண்டிப்போம்.
எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ்
டிஎஸ்பி மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
#வாச்சாத்தி சம்பவத்தில் வனத்துறை அதிகாரிகள்
காவலர்கள் 223 பேரை சிறையிலே கம்பி எண்ணவைத்தவர் டெல்லிபாபுதான் என்பதை
மறந்துராதீங்க டிஎஸ்பி சார்."
Bala Bharathi
Junior Periyar தமிழக வரலாற்றில் எளிமை என்றால் கக்கனையும் காமராஜையும் நினைவு கூறும் சமூகம் இந்த டில்லிபாபுவை மறந்து விடுகிறது DSP இவர் மீது தைரியமாக கை வைக்க காரணமே இவர் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கொள்ளாதது தான், இதைபோல் இதே இயக்கத்தை சேர்ந்த முன்னாள் MடA தளி ராமசந்திரன் மீது கை வைத்தால் அந்த DSP யின் தலை இருக்காதே!

கருத்துகள் இல்லை: