வெள்ளி, 29 ஜூன், 2018

இனி ஏடிஎம்-ல் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால்..! வங்கி கணக்கு முடக்கப்படும்..! ரிசர்வ் வங்கியின் கூறுகெட்ட அறிவிப்பு

Natarajan Rajakumar Rajkamal : இனி ஏடிஎம்-ல் 4 முறைக்கு மேல் பணம்
எடுத்தால்..! வங்கி கணக்கு முடக்கப்படும்..! ரிசர்வ் வாங்கி அதிரடி அறிவிப்பு..!!
அப்ப ஏடிஎம்..?!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம்-களிலும், மாதம் 04 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் செலுத்தும் நிலைமை உள்ளது. இந்நிலையில், அடிப்படை வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள், மாதம் 04 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு மாதகால அளவுக்கு வங்கி கணக்கை முடக்க கோரி ரிசர்வ் வாங்கி உத்தரவு போட்டுள்ளதாம்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ''ஜன் தன் வங்கி கணக்கு திட்டம்'' அறிமுகம் செய்தது. இந்த வங்கி கணக்குகளை மத்திய அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களின் உதவி தொகைகள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்கில் சில மாற்றங்களை கொண்டு வர ஆர்பிஐ திட்டமிட்டது. அதன்படி, ;;இந்த கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த வங்கி கணக்கு, அந்த மாத முடியும் வரை முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாம்

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான வங்கி கணக்கின் பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: