சனி, 30 ஜூன், 2018

சேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 2

Savukku : சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை  ஆதரித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது, “மத்திய அரசின் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்படி சென்னை-சேலத்தை இணைக்கும் 277.3கிமீ நீளமுள்ள 8 வழி  பசுமைச் சாலையானது, மும்பை-பூனே மற்றும் டெல்லி-ஆக்ரா அதிவேக சாலைகளைப் போல வளர்ச்சியை ஊக்குவிக்கும்.”
“சென்னை மற்றும் சேலம் இடையே அமையும் 277.3கிமீ நீளமுள்ள 8 வழி  பசுமை விரைவுச் சாலையானது பத்தாயிரம் கோடி மதிப்பீட்டில் அமையும். இந்த திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இன்னும் இரண்டு மாதத்தில் டெண்டர்கள் விடப்படும்” – இவைதான் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் 26 பிப்ரவரி 2018 அன்று  இந்தத் திட்டத்தை அறிவிக்கும்போது சொன்ன வார்த்தைகள்.
ஏற்கனேவே சவுக்கு இணையதளத்தில்  “அழிவின் பாதை” கட்டுரை முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல, சேலம் 8 வழிச்சாலையானது ஒருபோதும் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் ஒருபகுதியாக இருந்திருக்கவில்லை. அதனை நாம் விரிவாகக் காண்போம்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள  திருச்சி-திண்டிவனம் சாலையை 6 வழித்தடமாக விரிவுபடுத்தும் திட்டம் 2005ல் உருவாக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், டெண்டர்கள் அறிவிக்கப்படுவதாகவும் இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில், மாநில அரசின் வேண்டுகோளின்படி திருச்சி-திண்டிவனம் 6 வழிச்சாலை திட்டமானது முழுமையாக கைவிடப்பட்டது என  NHAI-இல் உள்ள  நம்பகமான தகவல்கள் சொல்கின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எழுதிய கடிதம் மறைக்கப்பட்டது. மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு 25.02.2018 அன்று எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “22 எண்ணிக்கையிலான மாநிலச் சாலைகளை விரைவில்  தேசிய நெடுஞ்சாலைகளாக பிரகடனப்படுத்தக்கோரி  15.12.2017 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட வேண்டுகோளை  மீண்டும் வலியுறுத்துகிறேன்

15.12.2017 மற்றும்  29.01.2018 தேதிகளில் எழுதப்பட்ட கடிதங்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக  தமிழகத் தகவல் துறையில் உள்ள நம்பகமான ஒரு தகவல் கூறுகிறது.
வாஜ்பாய் அரசின் தங்கநாற்கரச் சாலை திட்டம் வரிசையில், ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டமானது மோடி அரசின் முக்கியமான திட்டம் ஆகும்.
பாரத்மாலா திட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டிருப்பது, “நெடுஞ்சாலைத் துறையின் பாரத்மாலா பரியோஜனா என்னும் புதிய திட்டமானது நாடு முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் நகர்வைத் திறமையாக மேம்படுத்தும். பொருளாதார வழித்தடங்களை உருவாக்குதல், உள்நாட்டு வழித்தடங்கள் இணைப்பு, தேசிய வழித்தடங்களை சிறப்பாக மேம்படுத்தல், எல்லை மற்றும் சர்வதேச இணைப்பு சாலைகள், கடலோர மற்றும் துறைமுக இணைப்பு சாலைகள், மற்றும் பசுமைவழி விரைவுச் சாலைகள் ஆகிய பயனுள்ள வசதிகளை ஏற்படுத்தி முக்கிய உட்கட்டமைப்பு இடைவெளிகளை  இந்த திட்டம் இணைக்கும். முதல்கட்டமாக 24800கிமீ கருத்தில் கொள்ளப்படும்.”
பொதுவெளியில் கிடைக்காத முக்கிய ஆவணமாக சவுக்கு தளத்தினால் பிரத்யேகமாக பெறப்பட்டது. அதிலுள்ள தகவல்களின்படி, “நாடு முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் நகர்வைத் திறமையாக மேம்படுத்த பாரத்மாலா என்னும் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. தற்போது உள்ள முறையின்படி எடுக்கப்பட்ட திட்டங்கள், போதுமான வளர்ச்சியை எட்டாத காரணத்தால், பகுதி பகுதியாக திட்டங்களை செயல்படுத்தவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.”
பாரத்மாலா திட்டத்தின் முதல்கட்டமானது ஐந்து வருட கால இடைவெளியில் நிறைவேற்றப்படும். அதாவது 2017-18 முதல் 2021-22 வரை. பொருளாதார வழித்தடங்களை உருவாக்குதல், உள்நாட்டு வழித்தடங்கள் இணைப்பு, தேசிய வழித்தடங்களை சிறப்பாக மேம்படுத்தல், எல்லை மற்றும் சர்வதேச இணைப்பு சாலைகள், கடலோர மற்றும் துறைமுக இணைப்பு சாலைகள், மற்றும் பசுமைவழி விரைவுச் சாலைகள் ஆகியவை முதல்கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.”
“போக்குவரத்தானது 50,000 PCU-க்கும் அதிகமாக உள்ள மற்றும் வளர்ச்சி அடைந்த பகுதிகளை உள்ளடக்கிய  தேசிய மற்றும் பொருளாதார வழித்தடங்களின்  சில பகுதிகள்.” இவைதான் பாரத்மாலா திட்டத்தின் கீழுள்ள பசுமைவழி விரைவுச் சாலைகளுக்கான தகுதி ஆகும். அந்த வகையில் 1,900 கிமீ தொலைவிலான வழித்தடங்கள்  பசுமைவழி விரைவுச் சாலைக்காக அடையாளம் காணப்பட்டன. அதில் சுமார் 800 கிலோ மீட்டரானது பாரத்மாலாவின் முதல்கட்டத்தில் வருகிறது.
பாரத்மாலா திட்டத்தின்படி அந்த 800 கிலோமீட்டரில் ஒரு கிலோமீட்டர் கூற தமிழ்நாட்டிற்குள் அடையாளம் காணப்படவில்லை. மேலும்  பசுமைவழி விரைவுச் சாலைக்கான முக்கிய நிபந்தனைகளுள் ஒன்று- “நிலம் கையகப்படுத்துதல் எளிமையாக உள்ள  மற்றும் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகள் எளிமையாக உள்ள வழித்தடங்கள்”.  புதிதாக முன்மொழியப்பட்ட 8 வழி சாலை திட்டமானது “நிலம் கையகப்படுத்துதல் எளிமையாக உள்ள” என்னும் பிரிவின் கீழ் கற்பனையில் கூட பொருந்தாது. சட்டம்  ஒழுங்கு அச்சுறுத்தல்களை மேற்கோள்காட்டி  மாநில உளவுப் பிரிவானது இந்த திட்டத்திற்கு சிகப்புக் கொடி காட்டியுள்து என்பதையும் நாம் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

16 ஜூன்  2017 அன்று முதன்முறையாக பாரத்மாலா உருவாக்கப்படும்போது மற்ற விதிமுறைகளுடன் சேர்த்து பின்வரும் விதியும் வரையறுக்கப்பட்டது. “நிலம் கையகப்படுத்துதல் எளிமையாக உள்ள இடங்கள், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல்களைப் பெறுதல் அனைத்தும் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும், இந்த நடவடிக்கைகள் முடிவடையும் தேதியையும் சேர்த்து. தனியார் மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்களுக்கு 80% நிலமும், பொறியியல் கட்டுமானம் சார்ந்த  திட்டங்களுக்கு   90% நிலமும் கிடைப்பதை உறுதி செய்யாமல் எந்த திட்டமும் வழங்கப்பட மாட்டாது”.
பாரத்மாலாவிற்காக  9000கிமீ தொலைவுக்கு திட்டங்களை அடையாளம் காணும் பணி குறிப்பிடத்தகுந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. முழுமையான விஞ்ஞான ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்தப் பாதைகள்/திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.  Total Station Survey, LiDAR, Visual Inspection and Ground Penetrating Radar போன்ற முறைகளின் மூலம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
வழித்தடங்களை அடையாளம் காணும் பணியும் அறிவியல்ரீதியாக மேற்கொள்ளப்பட்டன.  சரக்குகளைக் கையாளுதல் குறித்து 600 மாவட்டங்களில்   வியாபாரரீதியாக கணக்கெடுப்பு, 90% சரக்குகளை எடுத்துச்செல்லும் 12000 பாதைகளில் குறுகிய பாதைக்கான வரைபடம் தயாரித்தல், நாடு முழுவதும் 1500க்கும் அதிகமான பகுதிகளில் தொழில்நுட்பம் வழியாக போக்குவரத்து கணக்கெடுப்பு, செயற்கைக்கோள் மூலமாக வழித்தடங்களை அடையாளம் காணுதல்.
சென்னையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹைதராபாத், பாண்டிச்சேரி, ஈரோடு, பெங்களூர் மற்றும் பெல்லாரி ஆகியவை அதிக இறக்குமதி நகரங்களாக அடையாளம் காணப்பட்டன. ஹைதராபாத், பாண்டிச்சேரி, பெங்களூர், விஜயவாடா மற்றும் மும்பை ஆகியவை அதிக ஏற்றுமதி  நகரங்களாக அடையாளம் காணப்பட்டன.
இந்த ஆய்வில் எந்த இடத்திலும் சேலம் இடம்பெறவில்லை. மேலும் 20% போக்குவரத்து பெங்களூரிலிருந்து இருப்பதாக இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அதுபோல சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு 48% போக்குவரத்து, மதுரைக்கு 14%, பெங்களூருக்கு 37%.

மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பொருளாதார வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டன. சென்னை-கர்னூல் இடையே EC 17 மற்றும் சென்னை-மதுரை இடையே EC 19. ஆனால் சென்னை-மதுரை இடையே ஏற்கனவே இருக்கும் பாதையை  விரிவுபடுத்த எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. மாறாக திண்டிவனம்-திருச்சி 6 வழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. இது பல்வேறு அறிவியல் ஆய்வுகளின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிரானது.
பன்முனை போக்குவரத்து பூங்காக்களை உருவாக்க பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையால் செய்யப்பட்டு, நாடு முழுவதும் 24 போக்குவரத்து பூங்காக்கள் அடையாளம் காணப்பட்டன.  அவற்றில், சென்னை மற்றும் கோவை மட்டுமே சாலை போக்குவரத்துத் துறையால் கண்டறியப்பட்டது.

தற்போது உள்ள நெருக்கடி மிகுந்த சாலைகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் நெரிசலை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.  இந்த வகையில் 28 நகரங்கள் அடையாளம் காணப்பட்டன.  இதிலும் மதுரை மட்டுமே 28 நகரங்களில் இடம் பிடித்துள்ளது.    பயணிகள் பன்முனை நிலையங்கள் ஆராயப்பட்டு, அந்த பட்டியலிலும்  சென்னை மட்டும் மதுரையே அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதிலும் மதுரை இல்லை.

23.11.2017 அன்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த அறிக்கையில் கூறியது,”பாரத்மாலா பரியோஜனா என்பது 5 வருட திட்டமாக இருப்பதால், தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட சாலைத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதல் வருடத்திலேயே தொடங்கப்பட வேண்டும்”.
சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
25.02.2018  அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது, “முன்மொழியப்பட்ட சென்னை-சேலம் பசுமை வழித்தடத்தை பாரத்மாலா திட்டத்திற்குள் கொண்டுவருவது பற்றி பரிசீலித்து ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகிறேன்”.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வழித்தட திட்டமானது  ‘பாரத்மாலா பரியோஜனா’வுக்குள் பொருந்தும் என எப்படி பழனிச்சாமி எண்ணினார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. மற்றும் முழுமையான அறிவியல் ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட/திட்டமிடப்பட்ட  ‘பாரத்மாலா பரியோஜனா’வுக்குள் இந்த திட்டம் பொருந்தும் என்பதை ஒரே இரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எப்படி  கண்டுபிடித்தார் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தங்கள் வாழ்வாதாரத்தையும் நிலத்தையும் இழக்கவுள்ள  மக்கள் இந்த திட்டம் குறித்து ஆத்திரமடைந்துள்ளனர்.

A villager in Salem watching the authorities who had come to lay marker stones
(புகைப்படம்: வழித்தடக் கற்களை நடவந்த அதிகாரிகளை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கிராமத்துப் பெரியவர்)
காவல்துறையைக் கொண்டு மக்கள் போராட்டத்தை அடக்கிவிடலாம் என்பது மட்டுமே  எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமாக உள்ளது.
அதிக அதிகாரம், அதிக துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும் என்றார் ஆங்கிலேய தத்துவ அறிஞர் எட்மன்ட் பர்க்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் விதிவிலக்கல்ல.
மொழிபெயர்ப்பு உதவி – குருநாதன் சிவராமன்

கருத்துகள் இல்லை: