நக்கீரன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் ஜக்கி
வாசுதேவ், பாபா ராம்தேவ் உள்ளிட்டோரால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். மேலும், இதனால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும்
திறக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சமும் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், ஆஸ்துமா,
மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுவதாக
குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட்
ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி
சென்றனர்.
அப்போது தடையை மீறி
பேரணி சென்றதாக அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்கள் முன்னதாக லண்டன் பயணம் சென்ற பாபா ராம்தேவ், அங்கு வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வாலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து புகைப்படத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ்,
லண்டன் பயணத்தின் போது, வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வாலை சந்தித்து பேசினேன். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தேசிய கட்டிடப் பணியில் அவரது பங்களிப்பை நான் வணங்குகிறேன்.
சர்வதேச சதிகாரர்கள் இந்தியாவின் தெற்கில் வேதாந்தாவின் ஆலையில் அப்பாவி உள்ளூர் மக்களால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். ’நாட்டிற்கான தொழில் வளர்ச்சி கோயில்களாகும்’ அவை மூடப்படக்கூடாது என அவர் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள், ஸ்டெர்லைட் குறித்து ஜக்கி வாசுதேவ் தனது டிவிட்டர் பதிவில், காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.
நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என அவர் கூறியது மேலும் சர்ச்சைய ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது கருத்து டிவிக்களில் விவாதமானதை அறிந்த ஜக்கி வாசுதேவ், மீண்டும் ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதில், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. சுற்றுப்புற பாதிப்பு தொடர்பான விதிமீறல்களை சட்டப்படி அணுக வேண்டுமே தவிர பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வணிகத்தை மூடுதல் உள்ளிட்ட செயல்கள் தேச நலனுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டது பற்றி இதுவரை பிரதமர் நரேந்திர மோடி வாய்திறக்கவில்லை. அதேபோல், மோடியுடன் நெருக்கமாக இருந்து வரும் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் போன்றோர் வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வாலை சந்திப்பதும் அதன் பின், நாட்டிற்கான தொழில் வளர்ச்சி கோயில்களாகும் அவை மூடப்படக்கூடாது, பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என்று ஸ்டெர்லைட்க்கு ஆதரவான கருத்துகளை தெரிவிக்கும் அவர்களும் பொதுமக்களின் நிலையில் இருந்து அவர்களின் பாதிப்பு என்ன? 13 பேர் உயிரிழந்தது எதற்காக என்பது குறித்து சற்றும் சிந்திப்பது இல்லை.
Baba Ramdev Anil Agarval Sterlite |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக