shiyamsundar-
tamiloneindia :பெங்களூர்: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகள்
நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டது, விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால்
சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில்
பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பத்திரிக்கையாளர் கவுரி
லங்கேஷ்.
தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக
குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் அவர்
கொல்லப்பட்டார். இது குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்து இருந்தார்.
பிரகாஷ் ராஜ் கருத்து
பிரகாஷ் ராஜ் கருத்து
இந்த கொலை குறித்து தொடக்கத்தில் இருந்து தைரியமாக பேசியவர்களின்
பிரகாஷ்ராஜ் முக்கியமானவர்.
இந்துத்துவா அமைப்புகள்தான் கொலையை அரங்கேற்றி
இருக்கிறது என்று கூறினார்.
இவர் கவுரி லங்கேஷுக்கு நெருங்கிய நண்பர்
ஆவார். இவர் மோடி குறித்து தைரியாமாக பேசினார்.
இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான
கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.
கே டி நவீன் குமார் தன்னுடைய
கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலையில் பரசுராம் வாக்மோர் என்ற
தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு பிரிவு
போலீசார் கைது செய்தனர். பரசுராமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரிடம்
வாக்குமூலம் அளித்துள்ளான்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், பிரகாஷ்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு
இருக்கிறார்கள்.
அதன்படி பிரகாஷ் மோடிக்கு எதிராக அதிகமாக பேசினார். கொலை நடந்ததில் இருந்தே அவர், இந்துத்துவாவிற்கு எதிராக பேசினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். ஆனால் கடைசியில் போலீஸ் எங்களை பிடித்துவிட்டது என்றுள்ளான். பிரகாஷ்ராஜ் டிவிட் இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார். அதில் '' எதிர்க்கும் குரல்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். என்னுடைய குரல் இன்னும் வலுப்பெறும். இவ்வளவு வெறுப்பரசியலை செய்துவிட்டு நீங்கள் தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக