சனி, 30 ஜூன், 2018

பேராசிரியை நிர்மலா: சம்பந்தப்பட்ட எல்லோரும் என்னிடம் கெஞ்சினாங்க .. .. நான் என்ன செய்வேன்னு அவங்களுக்கு தெரியும்

மின்னம்பலம் : குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கல்லூரி
பேராசிரியை நிர்மலா தேவிக்கு சோதனை நடைபெற்றது. அவரை பேச வைத்து ஆடியோவை பதிவு செய்தார்கள் அதிகாரிகள். அதன் பிறகு புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டு இருக்கிறார். புழல் சிறையில் உள்ள பெண் அதிகாரிகள் பலரும் நிர்மலா தேவியை அவர் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வந்திருக்கிறார்கள்.
அப்போது அவரிடம் சிலர் பேசியும் இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு தைரியமா இருக்கே... என்று கூட சிலர் கேட்டார்களாம். அதற்கு நிர்மலா தேவி, ‘போலீஸ் என்னை தேடி வந்தபோது ஒருநாள் முழுக்க நான் வீட்டை திறக்காமல் இருந்தேன் இல்ல... அப்போ என்ன செஞ்சேன்னு நினைச்சீங்க? யாரெல்லாம் இந்த விவகாரத்துல சம்பந்தப்பட்டு இருக்காங்களோ எல்லோருக்கும் பேசினேன். எல்லோருமே என்கிட்ட கெஞ்சினாங்க. அவங்களை மாட்டிவிடாமல் இருக்கச் சொல்லி கேட்டாங்க.
ஜெயிலில் இருந்து எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியில் கொண்டு வரும் பொறுப்பை அவங்க ஏத்துகிட்டாங்க.
என்னவெல்லாம் நடக்கும் என்பதை வழக்கறிஞர்கள் மூலமாக எனக்கு சொல்லிட்டுதான் இருக்காங்க. அதுபடிதான் நடந்துட்டு இருக்கு. இதுல கொஞ்சம் மாறினாலும் நான் என்ன செய்வேன்னு அவங்களுக்கு தெரியும்..’ என்று சொன்னாராம்.
நிர்மலா சொன்னதைக் கேட்டு சிறைத்துறை அதிகாரிகளே அதிர்ந்துவிட்டார்களாம். அதுமட்டுமல்ல...விபச்சாரமே செஞ்சாலும் அதிகபட்சமாக என்ன தண்டனை கொடுப்பீங்க? ஃபைன் தானே கட்டச் சொல்லுவாங்க. அதெல்லாம் எனக்காக கட்டுவாங்க...’ என்றும் சொன்னாராம் நிர்மலா!”

கருத்துகள் இல்லை: