திங்கள், 25 ஜூன், 2018

அந்த டைரக்டர்ஸ்கிட்ட இப்படியொரு கேள்வி கேப்பாங்களா? மாலினி ஜீவரத்தினம்!

Lakshmi Kanth Bharathi :பொதுவாக ஒடுக்குமுறை என்றாலே நம் நினைவுக்கு
வருவது அரசாங்கம் அல்லது மதம் அல்லது சாதி சார்ந்த கொடுமைகள்தான். ஆனால் எத்தனை பேர் தனி மனித உரிமை மறுத்தல் ஒடுக்குமுறைகள் அன்றாடம் தொடுக்கப்படுகின
மாலினி ஜீவரத்தினம் Malini Jeevarathnam யார்?
நான் ஒரு ஒடுக்கப்பட்ட பால் ஈர்ப்பை சேர்ந்தவள். இந்த சமூகத்தில் இருக்க தகுதியான ஆதார், வாக்குரிமை உள்ளிட்டவை பெற்ற, இந்த நாட்டில் பிறந்த, இந்த நாட்டில் வாழும் தீண்டத்தகாத ஒரு உயிர்.
நீங்கள் ஒடுக்கப்படுவதாக எப்போது உணர்ந்தீர்கள்?
இந்த சமூகத்தில் எழுபது சதவீதத்தினர் ஒடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். வர்க்கம், சாதி, மதம், மொழி, நிறம், தோற்றம் அடிப்படையில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பினர் மீது ஒடுக்குமுறையை நடத்தி வருகிறது. இயற்கையான ஈர்ப்பு அடிப்படையில் ஒரே பாலினத்திற்குள் காதல் கொள்கிறவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒடுக்குமுறையாக நான் பார்க்கின்றேன். நான் எதை சாப்பிடணும், நான் யாரை காதலிக்கணும் எப்படி நடக்கனும் என்பது அடிப்படையாக வாழ்வதற்கான ஒடுக்குமுறை எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறது.


எனக்கு சிறு வயதிலிருந்தே நடந்துவருகிறது. அது ஒடுக்குமுறை என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருப்பதுதான் மிக மோசமானது. அடிமைப்பட்டிருக்கிறோம் என்று உணராமலேயே ஒடுக்கப்படுவது மிகப் பெரிய ஆதிக்கம். எனக்கு அம்மா, அக்கா, அப்பா இருந்தாங்க. ஆனால் அம்மா இறந்த பிறகு எனக்கு இந்த பயாலாஜிகல் (ரத்த உறவு) குடும்பத்திடம் இருந்த நம்பிக்கை போய்விட்டது. எனக்கு நான் பயாலாஜிகல் உறவு மீது நம்பிக்கை அதிகரித்தது. ரத்த உறவாக இருக்க மாட்டாங்க. எனக்கு ஒரு அண்ணனாகவோ அம்மாவாகவோ அப்பாவாகவோ இருப்பாங்க. அவங்க காட்டுகின்ற அன்பு பாலீர்ப்பை கடந்ததாக இருக்கும். நான் எந்த சாதி என்பது அவர்களுக்கு பிரச்சனையா இல்லை. ஆனால் என் ரத்த உறவுகளுக்கு இது எல்லாமே பிரச்சனையா இருக்கு.
சென்னையும் நீங்களும்?
சென்னை என்னுடைய டார்லிங் ஏரியா . காரணம் சென்னை விடுதலையை பேசுற இடமாக இருக்கு. என் ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்னால் பெண்களின் உரிமைபற்றி பேசினாலோ பாலீர்ப்பு பிரச்சனையைப் பேசினாலோ அதைப் புரிஞ்சு கொள்கிற நிலையில் அந்த மக்கள் இல்லை. ஆனால் சென்னையில் சில காதுகள் இருக்கு. இந்த பிரச்சனையை பற்றி கேட்கவும் அதை பற்றி விவாதிக்கவும்.
லேடிஸ் அண்ட் ஜென்டில் வுமென் ஆவணப்படம்...
ஜென்டில் வுமென் என்றால் நான்தான் அது என்று நானே என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். எனக்கு எப்போதும் உள்ள உணர்வு சிலவற்றை சொல்லும். அப்படிதான் ஜென்டில் வுமென் ஆவணப்படமும். எனக்கு கனவாக வந்ததை நான் காட்சிப்படுத்தி அந்த படத்தை எடுத்தேன்.
*கிராமப்புறங்களில் திரையிட்டுக் காட்டினீர்களா?*
முதலில் பொள்ளாச்சியில் ஒரு முதியோர் இல்லத்தில் 80வயது முதியோர் முன்பு படத்தை திரையிட்டேன். அங்கு இருந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கையும் கலாச்சார நம்பிக்கையின் வீரியம் அதிகமாகவே இருப்பதைக் கண்டேன். ஆனால் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் மனிதர்களே. அவர்கள் அனைவரும் படத்தை பார்த்த பிறகு “இந்த மாதிரியான உறவு முறை கொழுப்பெடுத்துபோன பிள்ளைகளின் செயல் என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அது உணர்வு சார்ந்தது என்று இந்த படத்தை பார்த்தும்தான் புரிஞ்சது. ஒரு வேளை எங்கள் பேரன் பேத்திகள் இப்படி இருந்து அவர்களை என் மகனோ, மகளோ ஒதுக்கி வைத்தாலும் கூட நாங்கள் அவர்களை ஒதுக்கி விடமாட்டோம்,” என்று சொன்னார்கள். எங்கெல்லாம் குக்கிராமங்கள் உள்ளதோ, எங்கெல்லாம் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்பதாக நினைக்கப்படுகிறதோ அங்கெல்லாம், அந்த கலாச்சாரங்களை விட மனித தன்மை மிக முக்கியமானதென உணர்த்துவது நம்முடைய கடமை. அதனாலேயே இந்த மாதிரியான படங்களை இன்னும் அதிகமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணமே வந்துவிட்டது.
அடுத்த படம் எப்போ?
இந்த படத்தை எடுத்தபின் என்னிடம் சிலர் கேட்டது; அடுத்து என்ன ஒரு ஹெட்ரோசெக்ஸ் (எதிர்ப்பாலின ஈர்ப்பு) காதல் படம்தானே எடுக்கப் போறிங்கனுதான். நான் ஏன் ஹெட்ரோசெக்ஸ் படத்தை எடுக்கணும்? நிஜ வாழ்க்கையிலும் நான் ஹெட்ரோசெக்ஸ் உறவுடன்தான் வாழணும்,சினிமாவிலேயும் ஹெட்ரோசெக்ஸ் காதலைத்தான் சொல்லணுமா? இந்த மாதிரியான படங்களை எடுத்தால் நீ இப்படியே போயிடுவேங்கிறாங்க, இப்படியே முத்திரை குத்திடுவாங்கன்னும் சொன்றாங்க. இதையே 1நூறு வருசமா தமிழ் சினிமாவில் ஹெட்ரோசெக்ஸ் காதல் படங்களாகவே எடுத்துக்கிட்டிருக்கிற டைரக்டர்ஸ் கிட்ட கேட்க வேண்டியதுதானே - அடுத்து நீங்க ஒரு ஹோமோசெக்ஸ் காதல் படத்தை எடுப்பீங்களான்னு?சினிமா எல்லா மக்களுக்குமானது. எல்லாருடைய கனவுகளையும் அரசியலையும் உழைப்பையும் காட்டக்கூடியது. இயல்பாக எனக்கு என்ன வருமோ அதைதான் நான் படமாக பண்ண முடியும். அதன் மூலமாக ஒரு புரிதலை ஏற்படுத்த முடியும். ஹெட்ரோசெக்ஸ் காதல் படம் பண்ணுவதில் கொஞ்சமும் தவறு கிடையாது. எனக்கு அதில் இப்போதைக்கு விருப்பமில்லை.
ஆண், பெண் பாலினங்களைத் தாண்டிய பாலின மக்கள் பற்றி..
சாதி வேறுபாட்டை எதிர்க்கிறவர்களில் பலர் ஆண் சாதி பெண் சாதி இரண்டைத் தவிர வேறு சாதி எதுவும் இல்லையென்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டையும் தாண்டி பல பாலினங்கள் இருக்கின்றன. பொதுவாக அறியப்பட்டுள்ள ஆண் பெண் திருநங்கை திருநம்பி உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றன. அதை போலவே பாலின ஈர்ப்புள்ளவர்களும் ஐம்பதுக்கு மேற்பட்ட வகைகளில் இருக்கிறார்கள். நமக்கு தெரியாத ஒன்று தெரியாமலே போகட்டும், நாம் மட்டுமே வாழணும்னு நினைக்கிறது ஒரு பெரிய சுயநலமில்லையா?
தற்பாலின ஈர்ப்பாளர் உறவைக் குற்றமெனச் சொல்லும் சட்டப்பிரிவு 377 பிரச்சனையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இங்கு நிறைய ஆளுமைகள் ஒருபால் ஈர்ப்பு உறவாளர்களாக இருக்கிறார்கள். நிறைய அரசியல் தலைவர்களே கூட இருக்கிறார்கள். ஆனால் சட்டம் மட்டும் ஹோமோ ஃபோபியாவாகவே இருக்கு!எல்லாருக்குமான பொறுப்புள்ள தலைவர்களாக இருந்தாலே, அப்படி இருந்து யோசித்தாலே, அது எல்லாருக்குமான விடுதலையாக இருக்கும். அந்த தலைவர் ஹோமோ செக்ஸ்சுவலாகவோ ஹெட்ரோ செக்ஸ்சுவலாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சகமனிதர்களைப் புரிந்து சகமனிதராக எல்லாருக்குமான சுதந்திரத்தை பேசக்கூடிய சட்டத்தை எழுத முன்வந்தாலே போதுமானது. உதாரணமாக நான் ஒரு அவசர சட்டம் போடுறேன் வைச்சுக்குவோம். அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆண் பெண் உறவு முறையை தடை செய்றேன். ஆம்பளையும் பொம்பளையும் ரோட்டுல கைய பிடிச்சிட்டு போக கூடாது, ரொமான்ஸ் பண்ண கூடாது, அத்தனை கல்யாணத்தையும் 20 மணி நேரத்துல தடைசெய்யனும். ஆண் பெண் உறவுகளுக்கு பிறக்கிற அத்தனை குழந்தைகளையும் ஹாஸ்பிட்டல்ல தடை பண்ணனும்...ரோட்டில் ரெண்டு ஆண்கள் கைய பிடிச்சிட்டு போகலாம். பார்க்கில் ரெண்டு பொண்ணுங்க முத்தம் கொடுக்கலாம். எந்த மதத்தோட ஆலயமானாலும் ஆண் ஆண், பெண் பெண், திருநங்கை ஆண், திருநம்பி பெண் இப்படித்தான் கல்யாணம் பண்ணிக்கணும். பேஸ்புக்கில் ஆண் பெண் தவிர ஒரு பெண்ணும் பெண்ணும் முத்தமிடும் கட்சியோ, அவர்களை பற்றிய கவிதையோ, ஆண்ணும் ஆண்ணும் சேர்ந்த காதல் காட்சிகள் மட்டும் இருக்கணும்... இப்படி அந்த அவசரச் சட்டம் சொல்லுதுன்னா என்ன செய்வாங்க?
கால நிபந்தனையற்ற தடை போட்டா காதலர்கள் எல்லாம் என்ன பண்ணுவாங்க? செக்ஸ்சுவல் அட்ராக்க்ஷன் சார்ந்தவர்களெல்லாம் என்ன பண்ணுவாங்க?
தடை விதிக்கப்பட்டதால் மனைவி தன் கணவனையோ, கணவன் தன் மனைவியையோ பிரிந்திருக்கும் நிலை ரொம்ப வேதனையானது. இந்த மாதிரியான ஒடுக்குமுறையைதானே நூற்றாண்டு காலமா எங்க மீது திணித்து வந்திருக்கீங்க? அது எவ்வளோ பெரிய வலி. ஓர்பாலின உறவுரிமை சம்பந்தமா எதிர்ப்பாலி உறவாளர்கள் ஐந்து பேரை வைத்து எப்படி சட்டம் இயற்ற முடியும்? கருப்பரோட விடுதலைக்கு வெள்ளையர்கள் எப்படி சட்டம் போடுறது?
உலக நாடுகளில் இந்த உறவு முறை எப்படிப் பார்க்கப்படுகிறது?
24 நாடுகள் ஹோமோ செக்ஸ்சுவல் மட்டுமில்லாம எல்லா விதமான காதலையும் ஏற்று கொண்டுள்ளனர். அது இயற்கையான விஷயம் என்று பேசப்பட்டிருக்கு. அந்த மாற்றமும் இப்போதுதான் அங்கே ஏற்பட்டிருக்கு.
இந்தியாவில் இப்படியான மாற்றம் எப்போது எதிர்பார்க்கலாம்?
அந்த நம்பிக்கையை நான் ஒரு சவாலாக எடுத்துகொள்கிறேன். ரொம்ப வருசம்லாம் ஆகாது. நாம் நினைத்தால், உங்கள மாதிரி ஊடகடவியலாளர்கள் நினைத்தால். மக்கள் இயக்கவாதிகள் நினைத்தால் விரைவில் மாறும். இது ஹோமோ செக்ஸ்சுவல் மட்டும் இல்லை வேற்று பாலின ஈர்ப்பும் உள்ளது. திருநங்கை திருநம்பி மாற்றுப் பாலீர்ப்பு உள்பட இருக்கு. மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த எல்லாப் பாலினத்தவர்களும் கிராமத்தில் இருக்கிறார்கள். ஹான்றிலாட் கவிதை ஒன்று இருக்கிறது. "உங்கள் அமைதி உங்களை காப்பாற்றாது". உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்திடம் உடனே சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் உங்களை நீங்க புரிஞ்சிக்க ஆரம்பிக்கணும். உங்கள் விடுதலை பற்றி நீங்க பேச முன் வரணும். இன்னும் எத்தனை நாட்கள் நாம் மற்றவர்களை நமக்காக மைக்கில் பேசுவார்கள் , நம்முடைய உரிமைக்காக அவங்க செத்துட்டாங்கனு பாவம் பார்த்துகிட்டு இருக்க போறோம். நம் உரிமைக்காக அவங்க பேசனும் அவங்க போராடனும் என்பதை தவிர்த்து நாம் நம்முடைய குரலை கொடுக்கணும். உங்க உரிமைகளை கேட்க தயங்க வேண்டாம்.
சந்திப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
Lakshmi Kanth Bharathi
(மாலினி தொடர்ந்து அடுத்த வாரம் 24.06.2018 உரையாடுகிறார் )
்றன. அப்படியான ஒரு ஒடுக்குமுறை பற்றி பேசுகிற ஒரு ஆவணப்படம் ‘லேடீஸ் அன் ஜென்டில்வுமென்’. ஆவணப்பட அரங்குகளில் மட்டுமல்லாமல் சமூகத் தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தற்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிப் பேசுகிற படம் அது. ப. ரஞ்சித் வழங்கலுடன் அவரது ‘நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரித்துளள இப்படத்தின் இயக்குநர் மாலினி ஜீவரத்தினம் நம்மோடு உரையாடுகிறார்.

கருத்துகள் இல்லை: