பெங்களூரு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடச் சொன்னால் அய்யோ
போச்சே போச்சே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது கர்நாடகம்.
ஆனால் பெங்களூருக்கு வழங்கப்படும் காவிரி குடிநீர் பாதி தண்ணீரை அது
வீணாக்கி வரும் அவலச் செய்தியைப் பாருங்கள்.கர்நாடகத்தில் காவிரி நீரைப் பயன்படுத்துவதில் பெங்களூரின் பங்கு 50 சதவீதமாகும். பெங்களூர் மக்கள் காவிரி நீரைத்தான் குடித்து வருகின்றனர். அதில் 49 சதவீத அளவு தண்ணீரை கர்நாடகம் வீணடித்து வருகிறதாம். இதை எந்தக் கணக்கிலும் கர்நாடக அரசு சேர்ப்பதில்லை. அதாவது காந்திக் கணக்கு என்று சொல்வார்களே அது போல.
ஒரு சொட்டைக் கூட தமிழகத்துக்காக கொடுக்க மாட்டோம் என்று யோக்கிய சிகாமணிகள் மாதிரி பேசும் கர்நாடக அரசுத் தரப்பு உண்மையில் பெங்களூருக்கு குடிநீருக்காக அனுப்பும் நீரில் பாதியை வீணாக்கி வருகிறார்களாம். இந்தத் தகவலை இந்தியாஸ்பெண்ட் ஆய்வுச் செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.
மிகப் பெரிய அளவில் இப்படி குடிநீரை வீணடிக்கும் நகரம் கொல்கத்தாதான். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் பெங்களூரும் காவிரி நீரை வீணாக்கி வருகிறதாம்.
பெங்களூர் மக்கள் தொகை அடர்த்தியானது, கர்நாடகத்தின் மக்கள் தொகை அடர்த்தி சராசரியை விட 13 மடங்கு அதிகமாகும். பெங்களூருக்கு தினசரி மொத்தம் 4..." data-gal-headline="49 சதவீத நீர் வீண்" data-gal-src="tamil.oneindia.com/img/600x100/2016/09/16-1474026166-graph-d-d600.jpg" data-pagetype="0" data-slno="1" data-url="slider-pf210526-262960" id="slider0">
49 சதவீத நீர் வீண்
மீதமுள்ள தண்ணீரில் 40 சதவீத அளவுக்கு வீடுகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. 5 சதவீதம் பாதி குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்குப் போகிறது. 4 சதவீதம் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்குப் போகிறது. மீதமுள்ள தண்ணீர் துப்புறவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான உபயோகத்திற்கு வழங்கப்படுகிறது.
கொல்கத்தாவுக்கு அடுத்த இடம்
ஒரு நாளைக்கு 600 மில்லியன் லிட்டர் வேஸ்ட்
தண்ணீர்த் திருட்டு
மெயின் விநியோக பைப்புகளில் பெருமளவில் லீக்கேஜ் ஆகிறதாம். கிட்டத்தட்ட இதன் மூலம்தான் 88.5 சதவீத தண்ணீர் வீணாகிறதாம். பல்வேறு இடங்களில் நீர்க் கசிவு ஏற்படும் என்றும், இது வழக்கத்திற்கு விரோதமானது இல்லை என்றாலும் கூட இதை அவ்வப்போது சரி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறார்கள்.
அதிக அளவில் பயன்படுத்துகிறது
பெங்களூருக்கு மட்டும் 19 டிஎம்சி நீர் குடிநீருக்காக அனுப்பப்படுகிறது. சமீபத்தில் இதை மேலும் 10 டிஎம்சி உயர்த்தி 29 டிஎம்சியாக உயர்த்தி விட்டது கர்நாடக அரசு. இதற்குக் காரணம் கடந்த 2007ம் ஆண்டு பல கிராமப்புறப் பகுதிகள் பெங்களூர் நகரத்துடன் இணைக்கப்பட்டதால். இதை மொத்தமாக 30 டிஎம்சியாக தற்போது உயர்த்தியுள்ளனர்.
பம்ப் போட்டு எடுப்பதால் செலவும் அதிகம்
பெங்களூர் உயரமான இடத்தில் உள்ளது. இதனால் காவிரியிலிருந்து பம்ப் செய்துதான் தண்ணீரைக் கொண்டு வருகின்றனர். இதற்கு அதிக அளவில் செலவு பிடிக்கும். பெங்களூர் நகரில் நிலத்தடி நீரை மக்கள் சுத்தமாக வழித்தெடுத்து விட்டனர். மாசும் அதிகரித்து விட்டது. ஏரிகளையும் காலி செய்து கவிழ்த்து விட்டனர். மேலும் பெங்களூருக்கு அருகில் உள்ள 120 ஆண்டு பழமையான ஹெசரகட்டா மற்றும் 83 வருட பழமையான திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கங்களும் காலாவதியாகி விட்டன. எனவே காவிரியை மட்டுமே பெங்களூரு நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீணாகும் காவிரி நீரை சரி செய்யும் பணிகளை மாநில அரசு துரித கதியில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தண்ணீரின் தேவை அதிகரிக்கும்போது நிலைமையும் மோசமாகி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக