சென்னை: காவிரி பிரச்சனை குறித்து இரு மாநில மக்களுக்கு நன்கு அறிமுகமான
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் பேச வேண்டும் என்று
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனைத் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற கர்நாடக அரசு தவறி விட்டது. பெங்களூரு வன்முறைக்கு முழுக்க முழுக்க சுயநலமான அரசியல்வாதிகளே காரணம்.
பதவி விலக வேண்டும்
இந்த வன்முறையால் இரு மாநில மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உடனடியாக கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்.
ரஜினி பேச வேண்டும்
இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் எழும் போது இரு மாநில மக்களுக்கும் நன்கு அறிமுகமான ரஜினிகாந்த் போன்ற திரையுலகத்தினர் பேச வேண்டும்.
பொய் சொன்ன கர்நாடகா
காவிரி பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.காவிரியில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை அணையில் ஆய்வு செய்தால் தெரிந்து விடும் என்பதால்தான், மக்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு நேற்று வரை பொய் சொல்லி வந்தது.
ஆனால் இப்போது 2017ம் ஆண்டு ஜனவரி வரை தங்களுக்கு தண்ணீர் இருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடவில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக