கர்நாடகாவுக்கு
அனுப்பப்படும் மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி இன்று நெய்வேலி
என்.எல்.சி-யில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். இதுதொடர்பாக அவர்
கூறுகையில், “கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதும் சொத்துகள் தீ வைத்து
எரிக்கப்படுவதுமான வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூருவில் ஒரே
நாளில் 100க்கும் அதிகமாக பேருந்துகளும் லாரிகளும் கூண்டோடு
தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் ரூ.200 கோடிக்கும் அதிகமான தமிழர்
சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது.
கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தமிழர் பாதுகாப்புக்கு ராணுவத்தை நிறுத்த வேண்டும். கர்நாடகாவுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் நெய்வேலி என்.எல்.சி-யில் இருந்து கர்நாடகாவுக்கு அனுப்பப்படும் மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி இன்று என் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் ராணுவப் பாதுகாப்பு தர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என்றார்.மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக