அவசர
அவசரமாக அதிகாலை வேளையில் 40 வீடுகளின் கதவைத் தட்டியது
வருமானவரித்துறையின் ரெய்டு படை. செப்டம்பர் 12-ந்தேதி நடந்த அதிரடியில்
சென்னை மாநகர மேயர் சைதை துரை சாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,
கீர்த்திலால் என்கிற பிரபல வைர வியாபாரி மற்றும் மீனாட்சி மிஷன்
மருத்துவமனை ஆகிய நான்கு பேரின் நாற்பது வீடுகள் மற்றும் அலுவலகங்கள்
அடங்கும்.செப்டம்பர் 12, 13
ஆகிய இரண்டு தினங்களில் நடந்த ரெய்டுகளில் சுமார் 150 கோடி ரூபாய் பணம்
மற்றும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ""இந்த ரெய்டு இத்துடன் நிற்காது. முன்னாள்
அமைச்சர் வைத்திலிங்கம். தற்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
வீடுகளில் தொடரும் நாங்கள் மேலிடத்தின் அனுமதி வேண்டி காத்திருக்கிறோம்.
அவர்கள் அனுமதி கிடைத்தால் வைத்திலிங்கம், ஓ.பன்னீர் வீடுகளுக்கு
பாய்வோம்' என்கிறார்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள்.
>யார் அந்த மேலிடம் என கேட்டதற்கு ""வேறு யார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதான்'' என்றவர்கள், ரெய்டு பின்னணியை விவரிக்கத் தொடங்கினர். ""மேயரின் சென்னை சைதாப்பேட்டை வீட்டிற்கு ரெய்டுக்கு போனபோது, "நான் யார் தெரியுமா? சென்னை நகர மேயர். "என் வீட்டிற்கு ரெய்டுக்கு வர என்ன துணிச்சல். இந்திய ஜனாதிபதியை போல சென்னை நகரின் முதல் குடி மகன் நான். இதோ முதல்வருக்கு நான் போன் போடுகிறேன்' என எகிறினார். அதற்கு, "உங்களது மகன் வெற்றி உங்களுடன் வசிக்கிறார். அவரைத் தேடித்தான் நாங்கள் வந்தோம். போயஸ் கார்டனுக்கு பேசுங்கள். அவர்களுக்கு நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்தது தெரியும் என்றோம். அவர் ஆடிப்போய்விட்டார். முதல்வரை சந்திக்கச் செல்வதாக சொன்னார். அவரை அனுமதித்தோம். இந்த ரெய்டு முழுவதும் அருண்ஜெட்லி, தமிழக முதல்வர் ஜெ. ஆகியோருக்கு தெரிந்தே நடந்தது' என்றார்கள்.
மேயர் துரைசாமியின் சேலையூர் மாடம்பாக்கம் பண்ணை வீட்டிலும், சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் அமைந்துள்ள கீர்த்திலாலின் தேனாம்பேட்டை நகைக் கடையிலும் ஏராளமான பணம் சிக்கியது. நத்தம் விஸ்வநாதனின் மகள் வீடு அமைந்துள்ள எம்.ஆர்.சி. நகர் பிளாட்டில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. நத்தத்தின் மருமகன் கண்ணன் வீட்டில் வெளிநாட்டில் அவர் செய்த முதலீடுகள் பற்றிய ஆவணங்கள் சிக்கின'' என்றனர் அதிகாரிகள்
அ.தி.மு.க.வின் முக்கியஸ்தர்களான நத்தம் மற்றும் சைதை துரைசாமி வீட்டில் ரெய்டு நடத்த மத்திய அரசோடு இணக்கமான போக்கு கொண்ட ஜெ. எப்படி அனுமதித்தார்?'' என அவர்களிடம் கேட்டதற்கு, ""நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி இருவர் மீதும் ஜெ.வுக்கு நல்ல நம்பிக்கை இல்லை'' என்றனர். ""கரூர் அன்புநாதன் வீட்டில் தேர்தல் நேரத்தில் போலி ஆம்புலன்ஸ் மூலம் பண விநியோகம் நடத்தியதாக தேர்தல் கமிஷனால் நடவடிக் கைக்கு உள்ளானபோதே நத்தம் விஸ்வநாதன் பற்றியும் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி ஆகியோரை பற்றிய ஆவணங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அப்பொழுதே இந்த இருவரை பற்றியும் நாங்கள் ஒரு பெரிய ஃபைலே தயாரித்து வைத்திருந்தோம்'' என்றவர்கள், அந்த ரகசிய கோப்புகளில் உள்ள தகவல்களை வைத்து வருமானவரித்துறை தயாரித்த ரகசிய குறிப்புகள் அடங்கிய ஃபைலை நமக்கு தந்தார்கள்
;அந்த ஃபைலின் பக்கங்களைப் படித்த நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. பி.அன்புநாதன் எனப்படும் இந்த நபரின் மொத்த சொத்து மதிப்பு 2005-2006ல் இரண்டரை கோடி. தற்பொழுது அவர் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார்.
அதற்கு மிக முக்கிய காரணம் நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர் செல்வம், வைத்தி லிங்கம் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர்தான்.
ஆரம்பத்தில் திருட்டு வண்டிகளை போலி ஆர்.சி. புத்தகங்கள் மூலம் விற்று வந்த அன்புநாதனுக்கு 2011ம் ஆண்டு செந்தில் பாலாஜி மூலம் நத்தம் விஸ்வநாதன் அறிமுகம் கிடைக்கிறது. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நடத்திய பண விநியோகத்தை அன்புநாதன் தனது போலி பதிவெண் கொண்ட வாகனங்கள் மூலமாக மேற்கொண்டதால்... அவருக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை நத்தம் விஸ்வநாதன் தருகிறார்.
இதுவரை அவரது பாஸ்போர்ட் விவரங்களி லிருந்து பார்க்கும் போது 2012-லிருந்து 2016 ஆண்டு வரையிலான நான்கு வருடங்களில் 90 நாடுகளுக்கு போய் வந்திருக்கிறார். அந்த நாடுகளில் நத்தம், ஓ.பி., வைத்தி ஆகியோரின் பணத்தை ஹவாலா முறையில் கொண்டு போய் முதலீடு செய்திருக்கிறார். அதில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் ஹாங்காங் ஆகியவை முக்கியமான நாடுகள்.

அதில் தாய்லாந்திலுள்ள Kasi Korn Bank (K.Bank) மிக முக்கியமானது. துபாயில் உள்ள என்கிற இடத்தில் 1900 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகத்தை நத்தம், ஓ.பி., வைத்திலிங்கம் ஆகியோருக்கு மனோஜ்குமார் கார்க் (Manoj Kumar Garg) என்ற பினாமி பெயரில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் அன்புநாதன்.
அன்புநாதன் இந்த 3 அமைச்சர்களின் பணத்தை சிங்கப்பூரை சேர்ந்த ;Kit Huat Trading Company என்கிற கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறார்."
;சீனாவில் ;Loxley Holdings ;மற்றும் China Bank of Communication ஆகிய நான்கு கம்பெனிகளில் முதலீடு செய்திருக்கிறார்.
அன்புநாதன் இந்தியா முழுவதும் இந்த மூன்று அமைச்சர்கள் பணத்தை முதலீடு செய்ய ஏயடத GVPR ENGINEERS LIMITED என்கிற கம்பெனியை ஹைதராபாத்தை தலைநகரமாகக் கொண்டு நடத்துகிறார்.
அதன்மூலம் பியர்லெஸ் என்கிற இன்சூரன்ஸ் கம்பெனியின் முதலாளியான பரஸ்மால் லோதாவை பயன்படுத்தி தனது முதலீடுகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்கிறார்.
இந்த பரஸ்மால் லோதா மூலம் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து நத்தம் விசுவநாதனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதேபோல் கொரிய கம்பெனியான ஹுண்டாய் கம்பெனியை நத்தம் விசுவநாதனுக்கு அறிமுகப் படுத்துகிறார்.
ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் சட்ட ரீதியான உதவியை ஜெ.வுக்கு பெற்றுத்தரும் அன்புநாதன், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்கும் வைபவத்துக்கு அழைக்கப் படுகிறார்... அதில் பங்கெடுக்கிறார்.இப்படிச் செயல்படும் அன்புநாதனும் நத்தம் விசுவநாதனும் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி (98400 48944) மற்றும் அவரது மகன் வெற்றி (98408 31881) ஆகியோருடன் அன்புநாதன் தனது பினாமி பண பரிவர்த்தனை களுக்காக பயன்படுத்தும் 99445 66669 மற்றும் 89739 65790 ஆகிய எண்களில் தொடர்ந்து பேசிவருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் பல முதலீடு& களை செய்திருந்தார்கள் சைதை துரை சாமியும் அவரது மகனும். அவை அன்புநாதன் மூலமாகத்தான் செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் மடிவாலாவில் 50 கோடி மதிப்புள்ள நிலத்தை துரைசாமியும் அவரது மகனும் அன்புநாதன் ஆகிய மூவரும் சேர்ந்து விற்றிருக்கிறார்கள்'' என பல அதிரடி விவரங்கள் வருமான வரித்துறையினரின் ஃபைலில் காணப்படுகிறது.
இந்தியாவின் ஒரு வைர வியாபாரியான பிரபுலாலுக்கு அடுத்தபடியாக பெல்ஜியம் நாட்டிலிருந்து நேரடியாக வைரம் இறக்குமதி செய்யும் கீர்த்திலால், நத்தம்+துரைசாமி கூட்டணியுடன் இணைகிறார். அவருக்காக சென்னை நகரின் மாநகராட்சி வணிக வளாகங்களை திறந்துவிடுகிறார் துரைசாமி. வணிகம் பெருகுகிறது. அதனால் கீர்த்திலாலும் வருமான வரி வளையத்தில் நத்தத்துடன் சிக்குகிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நத்தம், ஓ.பி., வைத்தி, தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி என கார்டனுடன் நெருக்கமாக இருந்த ஐவரணி மீது ஜெ.வுக்கு சந்தேகம் வந்தது.
ஜெ. சிறையிலிருந்த காலகட்டத்தில்...;பல்லாயிரம் கோடி பார்த்ததாக அவர்கள் விசாரணை வளையத்தில் வறுத்தெடுக்கப்பட்டனர். அதில் வைத்தி அப்ரூவரானார்.
;ஓ.பி.எஸ்., அன்புநாதன் மூலம் துபாயில் வாங்கிய ஓட்டலை ஒப்படைத்தார்
எடப்பாடி, தங்கமணி டோட்டல் சரண்டர் ஆனார்கள்.
ஆனால் நத்தம் பாம்பிற்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீன் போல செயல்பட்டு எஸ்கேப் ஆனார்.
நத்தமும் துரைசாமியும் கீர்த்திலாலுடன் கூட்டணி போட்டு கொள்ளையடிப்பதை தெரிந்து கொண்ட ஜெ.விடம், "கருப்புப் பணத்தை கைப்பற்றுகிறோம்' என அருண்ஜெட்லி சொல்ல ரெய்டுக்கு ஓ.கே. சொன்ன ஜெ., நத்தத்தின் பதவியையும் பறித்துவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்தால் மேயர் துரைசாமி முன்னாள் மேயர் ஆகிவிடுவார் என்பதால் அவரை விட்டு வைத்திருந்தார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் மீது வருமானவரித்துறை பாய்ந்திருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும்? கைது செய்யப்படுவார்களா என்பது ஜெ.+ஜெட்லி கூட்டணியின் முடிவைப் பொறுத்தது என்கிறார்கள் உயரதிகாரிகள்.;-தாமோதரன் பிரகாஷ்gt;படம் : அசோக் விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக