வைகோ சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சியில் அவரை பிக்கப் செய்ய அவரது கார் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்றது. காரில் வைகோ உதவியாளர் மட்டும் இருந்தார். காரை டிரைவர் பொன்னாங்கன் ஓட்டிசென்றார். கார் உளுந்தூர் பேட்டை அருகே சென்றபோது மாலை 7 மணி அளவில் திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் திடீரென வர கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் அடிபட்டு குறுக்கே வந்தவர் பலியானார். இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த வைகோவுக்கு தெரிவிக்கப்பட்டது என வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி உள்ளது
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே வண்டிப்பாளையம் என்ற
இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற விவசாயி சக்திவேல் என்பவர் மீது கார் ஒன்று மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததையடுத்து கார் டிரைவர் தப்பியோடிவிட்டார். சம்பவத்தை பார்த்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமாகியுள்ளது. இதற்குள் விபத்தில் அடிப்பட்ட சக்திவேல் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த சக்திவேலின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர் பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டனர். ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால்தான் சக்திவேல் உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் வாகனம் உடனே வந்திருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று கூறினர்.
போலீசார் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சொந்தமானது என்றும், அந்த காரில் டிரைவர் மட்டும்தான் வந்தார் என்றும், வைகோ வரவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்களை சமாதானம் செய்து வைத்த போலீசார், அந்த காரை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ததுடன் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
வைகோ சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சியில் அவரை பிக்கப் செய்ய அவரது கார் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்றது. காரில் வைகோ உதவியாளர் மட்டும் இருந்தார். காரை டிரைவர் பொன்னாங்கன் ஓட்டிசென்றார். கார் உளுந்தூர் பேட்டை அருகே சென்றபோது மாலை 7 மணி அளவில் திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் திடீரென வர கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் அடிபட்டு குறுக்கே வந்தவர் பலியானார். இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த வைகோவுக்கு தெரிவிக்கப்பட்டது என வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி உள்ளது. -எஸ்.பி.சேகர் nakkeeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக