திங்கள், 12 செப்டம்பர், 2016

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்மீது கேரளா போலீசார் தாக்குதல்!


தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அருகே, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்மீது கேரள போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். தமிழகமாணவர்களின் பள்ளி வாகனங்களை அனுமதிக்காத கேரள அரசைக் கண்டித்து எல்லையில் போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள்மீதுதடியடி நடத்தப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பரம்பிக்குளம், பெருவாரிப் பள்ளம் தூணக்கடவு ஆகிய அணைகள் தமிழக-கேரள எல்லையில் கேரளத்துக்குள் அமைந்துள்ளன. இத்திட்டஒப்பந்தத்தின்படி, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளை பராமரிப்பது, பாதுகாப்பது, நீர் மேலாண்மை போன்ற பணிகளை தமிழகமே செய்து வருகிறது.
மேலும் அப்பகுதிமலைவாழ் மக்கள் உட்பட அனைத்துப் பகுதி குழந்தைகளும் பள்ளி சென்றுவருவதற்கு தமிழக பொதுப்பணி சார்பில் பள்ளிப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிமக்கள் தமிழக பொதுப்பணித்துறையினரிடம் வைத்த வேண்டுகோளின்படி, இந்தப் பள்ளி வாகனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அந்தவாகனத்துக்கு ஓட்டுநர் நியமித்ததில் இருந்து எரிபொருள் செலவு, வாகனப் பராமரிப்பு முதலான செலவுகளை பொதுப்பணித்துறையே செய்து வருகிறது.
தினமும் பரம்பிக்குளம் முதல் ஆனைமலை சென்று வரும் இந்த பொதுப்பணித்துறை வாகனம் மூலம் மலைவாழ் மக்களின் குழந்தைகள், பரம்பிக்குளம் கட்டும்போதுபணியாற்றியவர்களின் குழந்தைகள் ஆகியோர் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், அந்தப் பேருந்துக்கு அனுமதி வழங்க முடியாது என கேரள பரம்பிக்குளம் வன அலுவலர்ராஜ்சன்குமார் தெரிவித்தார். இத்தனை நாள் அனுமதித்துவிட்டு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள், பரம்பிக்குளம் பகுதியில் வாகனங்களை மறித்துசாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொதுப்பணித் துறையினர், உடனே அந்த இடத்துக்கு விரைந்து பொதுமக்களோடு சேர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவஇடத்துக்கு விரைந்துவந்த கேரள போலீசார் அவர்களிடம் மறியலைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதில் ஆவேசமடைந்த போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பரம்பிக்குளம், ஆழியாறு பிரச்னை மீண்டும் தலைதூக்கியிருக்கும்நிலையில், இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் பலத்தசர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: