பிரதமர்
நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கோவை புளியங்குளம் பகுதியில் தூய்மை
இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர்
வானதி சீனிவாசன் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோணியம்மன் கோவிலுக்கு
தரிசனம் செய்ய சென்றார். சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு திரும்பிய அவரிடம்,
ஒருவர் திடீரென பூக்கொடுத்து தனது காதலை தெரிவித்தார். வானதி சீனிவாசன்
அதிர்ச்சி அடைந்து நின்றார். பின்னர் அங்கிருந்த பாஜகவினர்
சுதாரித்துக்கொண்டு, அந்த நபரை அடித்து உதைத்தனர். பின்னர் அங்கு
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அந்த நபரை கடைவீதி காவல்நிலையத்திற்கு
கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் மதுரையைச்
சேர்ந்த முத்துவேல் என்று தெரிய வந்தது
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வானதி, பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பங்கு அனைவருக்கும் உண்டு எனவும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முதலில் வரவேண்டும் எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக