புதன், 14 செப்டம்பர், 2016

16-ம் தேதி முழு அடைப்பு : விக்கிரமராஜா!


மின்னிம்பலம்.காம் :காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழகத்தில் வரும் 16-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் கடையடைப்பு போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு இதர வர்த்தக சங்கங்களும் ஆதரவளிக்க விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 16ம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு ஓட்டல்கள், லாரி ஓட்டுனர் சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, கர்நாடகத்தில் உள்ள தமிழ் வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் வன்முறையாளர்கள் தாக்கியதில் ரூ.2000 கோடி சொத்துகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான லாரிகள் பல கோடி ரூபாய் சரக்குகளோடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் அடையார் ஆனந்தபவன் தாக்கப்பட்டதில் மட்டும் சுமார் ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உயிர் காக்கம் பிரச்சனை என்பதால் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு டீக்கடை கூட அன்று திறந்திருக்கக் கூடாது. தமிழரைக் காக்க அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார் அவர். தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: