சனி, 17 செப்டம்பர், 2016

பெங்களூரில் 42 கே.பி.என். பஸ்களை தீக்கிரையாக்கிய 22 வயது இளம் பெண் கைது!


பெங்களூர்: காவிரிக்காக பெங்களூரில் நடந்த கலவரத்தின்போது கே.பி.என்
டிராவல்சுக்கு சொந்தமான பஸ்களை எரித்த பெண் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பெங்களூரில் கடந்த 12ம் தேதி, திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட, டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தீ வைப்பு சம்பவம் மாலை 4 மணியிலிருந்து 4.30க்குள் நடந்துள்ளது. 22 டிரைவர்களும், 2 கிளீனர்களும், ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இரவில் பணியாற்ற வேண்டும் என்பதால் அவர்கள் அயர்ந்து தூங்கியுள்ளனர்.
"பஸ் மீது பெட்ரோல், டீசல் ஊற்றப்படுவது தெரியவந்ததும், பஸ்சுக்குள் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த டிரைவர்கள் சமயோஜிதமாக வெளியே தப்பியோடிவ... தப்பியோடிய டிரைவர்கள்< பஸ் மீது பெட்ரோல், டீசல் ஊற்றப்படுவது தெரியவந்ததும், பஸ்சுக்குள் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த டிரைவர்கள் சமயோஜிதமாக வெளியே தப்பியோடிவிட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த இளைஞர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், கலவர பின்னணியில் ஒரு பெண் இருந்தது தெரியவந்தது.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: