சனி, 17 செப்டம்பர், 2016

முதல்வரைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்!


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  
தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை மேம்படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கும் நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்கும் எங்களுடைய விருப்பத்தை முதல்வரிடம்
தெரிவித்திருக்கிறோம். அதற்கான முழு ஆதரவையும் தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்" என்று கூறினார். காவிரிப் பிரச்சனை தொடர்பாக, தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு, காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், மிகப் பொறுமையாக கையாண்டிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதாகப்பட்டது கூட்டு  களவாணிகள் இருவரும்( Bjp+Admk) கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சி , சொத்துகுவிப்பு வழக்கில் இஷ்டப்பட்ட  தீர்ப்பு கர்நாடக தேர்தல் செலவுக்கு போதியளவு பணம் மற்றும் இதர குண்டர் தொண்டர் படை ஆதரவு போன்ற நாட்டுக்கு ரொம்ப முக்கியமான  விடயங்களில்  டீல்கள் ஒகே என்று  குண்டர்களுக்கு  காட்டுவதற்கு உள்ளூரு குலதெய்வம் இதய தெய்வத்திடம் சரண்டர் என்ற ஒரு காட்சி காட்டி இருக்காங்க

மேலும் இன்றைய முழுஅடைப்பு போராட்டம் குறித்து கேட்கப்பட்டபோது, இந்தப் போராட்டத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது அமைதியான முறையில் வியாபாரிகளாக முன்வந்து நடத்தும் போராட்டம். நேற்றே இதற்கான எங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தோம் என்றார். இதுகுறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று கேட்கப்பட்டபோது, இதுவரை இல்லை, நிச்சயமாக பிரதமரைச் சந்திக்கும்போது இதுகுறித்துப் பேசுவோம் என்றார்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: