செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கன்னட பாஜகவினர் தமிழர்கள் மீது தாக்குதல்? கன்னட அமைப்பினர்கள் போர்வையில் இந்துத்வாக்கள்?


காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் கலவரங்கள் நடந்து வருகின்றன. தமிழர்களை தாக்குவது, தமிழர்கள்
உடமைகளை தாக்குவது என சட்டத்தை காலில் போட்டு மித்து வருகின்றனர் கன்னடர்கள்.ஒட்டு மொத்த ஊடகத்தின் கவனமும் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கலவரங்களிலேயே உள்ளது.
இந்நிலையில் நேற்று பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.;இந்த விவாத நிகழ்ச்சியில் கர்நாடகாவில் உள்ள கலவர சாட்சியாக தமிழ் பெண்மணி ஒருவர் தொலைப்பேசியில் பேசினார்.
அப்போது அவர் இன்றைக்கு நடக்கும் இந்த ஒட்டுமொத்த கலவரத்திற்கும் பாஜக தான் காரணம் என ஆவேசமாக பேசினார். இதனால் அரங்கில் இருந்த பாஜகவை சேர்ந்த நாராயணன் ஆவேசமடைந்தார்.>தொடர்ந்து பேசிய பெயர் சொல்லாத அந்த கர்நாடக தமிழ் பெண், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் இந்த கலவரத்திற்கு காரணம் பாஜக தான் என மீண்டும் மீண்டும் பதிவு செய்தார். எடியூரப்பா, ஷெட்டர், முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா ஆகியோர் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த முறை பாஜக ஆட்சியில் இந்தபொழுது உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷெட்டர் தண்ணீர் திறந்து விட்டார். தற்போது மட்டும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றார். இங்கு கலவரத்தை நடத்துவது கன்னட அமைப்பினர் என கூறப்படுகிறது. ஆனால் கன்னட அமைப்பினர் என்ற போர்வையில் இருக்கும் பாஜகவினர் தான் இந்த கலவரத்தை நடத்துகின்றனர் என அவர் குற்றம் சாட்டினார்.>இங்கு நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறோம், கேவலமாக பேசுகிறார்கள். தமிழ் பத்திரிகையாளர்கள் வெளியில் தலை கட்ட முடியவில்லை. தமிழ் ஐஏஸ்-களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இந்த கலவரத்தில் நன்றாக குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என அந்த பெண் தெரிவித்தார்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: