திங்கள், 12 செப்டம்பர், 2016

கட்ஜு :இந்தியாவை புனித நாடாக அறிவிக்க வேண்டும்..ரகுபதி ராகவ தேசிய கீதக்கணும் ...


minnambalam.com :பல அதிரடிக்கருத்துக்களால் கவனம் ஈர்க்கும் இந்தியாவின்
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்தியாவை புனித நாடாக அறிவிக்க தனது ட்விட்டர் பக்கத்தில் பரிந்துரை செய்திருக்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் காரணங்கள் இதோ...
1. இந்தியாவில்தான் பெரும் காப்பியங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்கள் இயற்றப்பட்டன.
2. இந்தியாவில்தான் புனித நதியான கங்கா யமுனா, நர்மதா, பிரம்மபுத்திரா ஓடுகின்றன.
3. இந்தியாவில்தான் அயோத்தி, வாரணாசி, மதுரா, ஹரித்துவார், பூரி, துவாரகா, மதுரை, கயா, புத்த கயா, போன்ற புனித நகரங்கள் இருக்கின்றன.
4. இந்தியாவில்தான் அயோத்தியில் ராமனும், மதுராவில் கிருஷ்ணனும் பிறந்துள்ளார்கள்.
5. இந்தியாவில்தான ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியில் திளைத்தார்கள்.
6. இந்தியாவில்தான் புத்தர் ஞானமடைந்துள்ளார்.
7. இந்தியாவில்தான் ராமசரித மானசா, சுர்சாகர், திருக்குறள், திருப்பாவை மற்றும் பல பக்தி காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன.

8. இந்தியாவில்தான் பசு புனிதமாக கருதப்படுகிறது. பசு ரட்சகர்களால் அது பெருக்கப்படுகிறது. பாபாக்கள் இந்தியாவில் நிறைந்திருக்கிறார்கள்.
9. இந்தியாவில்தான் உலகிலே அதிக மக்கள் கூடும் கும்பமேளா நான்கு நகரங்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.
10. இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் புனித நகரமாக அறிவிக்கப்பட உள்ளது.
இப்படி பத்து முத்தான காரணங்களை(?) முன்வைத்துவிட்டு, ஒருவேளை இந்தியா புனிதமான நகரமாக அறிவிக்கப்பட்டால் என்வென்ன சட்டத்திட்டங்களை விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒரு பட்டியலிட்டிருக்கிறார். படிக்கும்போது தலை சுற்ற வாய்ப்பிருக்கிறது. சற்றே நிதானமாக படிக்கவும்.
1. ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை இந்திய தேசத்தின் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும்.
2. ஆண்கள் அனைவரும் கட்டாயமாக குங்குமப்பூ நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மற்றும் அவர்கள் கழுத்தில் ருத்ராட்ச மாலை இருப்பது அவசியம். பெண்கள் குங்குமப்பூ நிறத்தில் சேலை அணிய வேண்டும். ஒழுக்கமற்ற ஆண்களின் கண்களில் படாதவாறு அவர்களின் முகம் மூடியிருப்பது மிகவும் அவசியம்.
3. டெல்லியில் இருக்கும் இன்டியா கேட்டை இடித்து தரைமட்டமாக்க வேண்டும். அதே இடத்தில் நூறடி உயரமுள்ள கடவுளின் அவதாரமான ராமனின் சிலையை நிறுவ வேண்டும்.
4. அனைவரும் ஒருவரை சந்திக்கும் போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று வாழ்த்து சொல்லிக் கொள்ள வேண்டும்.
5. எல்லா நகரங்களிலும் கோமாதாவின் சிலையை நிறுவ வேண்டும். அந்த சிலையைப் பாதுகாக்க பசுக்காவலர்களை போலீஸ் போல் அதிகாரம் கொடுத்து நியமிக்க வேண்டும். கோமாதா சிலைகளுக்கு எவரேனும் தீங்கு விளைவித்தால் அவர்களை அடித்து துரத்தும் அதிகாரம் பசு காவலர்களுக்கு வேண்டும்.
6. காலை எழுந்த உடன் அனைவரும் ஆஞ்சநேய மந்திரத்தைக் கட்டாயம் ஓத வேண்டும். அப்படி ஓத மறந்தவர்களுக்கு நீண்டகால சிறை தண்டனை வழங்க வேண்டும். (கடவுளே!)
7. அனைத்துப் பெண்களும் கணவனுக்கு, கடவுளுக்கு, குருவுக்குக் கீழ்படிய வேண்டும்.
8. முட்டாள்தனமாக வழி தப்பிப் போன இந்துக்கள் அல்லாதவர்கள் அனைவரும் இந்து மதத்துக்குத் திரும்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை: