ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

டில்லி ஜே என் யூ மாணவர் தேர்தலில் இடது சாரி அணி பெருவெற்றி JNU election results: Left alliance sweeps all 4 seats, elects Mohit Pandey as President


The left has won all the posts of the president, vice president, general secretary and joint secretary. Left candidates- Mohit K Pandey (President), Amal Pullarkkat (Vice President), Satarupa Chakraborty (General Secretary) and Tabrez Hasan (Joint Secretary)- won the seats.
JNU election results: Left alliance sweeps all 4 seats, elects Mohit Pandey as President
Breaking news     இடது சாரிகளின் கூட்டு முன்னணி மிகப்பெரும் வெற்றியை பெறுவது உறுதியாகி உள்ளது . பாஜக  ஆர் எஸ் எஸ் ஆதரவு ஏபிவிபி படு தோல்வி !  டில்லி நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்
இந்துத்துவா அணியா- எதிர்ப்பு அணியா என்ற போட்டி
மாணவர்கள் மத்தியில் புது திருப்பம் புதுடில்லி, செயில்  நேற்று (9.9.2016) நடைபெற்ற டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தல் இந்துத்துவாவுக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்கிற கொள்கையின் அடிப்படையில் நடந்துள்ளது. தேர்தல் முடிவு 12.9.2016 அன்று வெளியாகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்துத்துவாவைத் திணிக்கின்ற வகை யில், ஆர்.எஸ்.எஸ். பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியைக் கொண்டு மத்திய அரசின்கீழ் இயங்கிவரும்பல் கலைக்கழகங்களில்தங்களதுஇந்துத் துவாதிணிப்புசதிராட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. கல்வி பயில்வதற்காக தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மற்றும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் பெரும் கல் வித் தாகத்துடன் மத்திய பல்கலைக் கழகங்களைநோக்கிவருகின்றனர்.
கல்வி பெறுவதற்கு உண்டான முழுத் தகுதியுடன் மற்றவர்களுடன் போட்டி போட்டு முன்னேற்றம் கண்டு வருகின் றனர்.

காலம்காலமாகபார்ப்பனஉயர் ஜாதியினத்தவர்கள்மட்டுமே ஆதிக் கம்செலுத்திவருகின்றகல்விநிறுவ னங்களுக்குள்ளும்உரியமுழுத்தகுதி களுடன்சென்றுகல்விபயின்றுவரு கிறார்கள்.அதனால்,தாழ்த்தப்பட்ட, பழங் குடி வகுப்பினர் மற்றும் பிற் படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து உயர் கல்விபயிலும்மாணவர்களுக்கு தொல்லைகொடுத்துஅவர்களின்கல்வி உரிமையைபறித்திடஇந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.பாஜகவின்மாண வர்அமைப்பாகியஏபிவிபியை தூண்டி விட்டு,பல்கலைக்கழகங்களுக்குள்இந் துத்துவநஞ்சினைவிதைத்து வருகிறார்கள்.

இதன்மூலமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் முசுலீம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., ஏபிவிபி அமைப்புகளால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்ற இந்நிலை அய்தராபாத் தொடங்கி, டில்லி ஜேஎன்யூ, எய்ம்ஸ், அய்அய்டி என பல்வேறு தளங்களிலும் பரவி வருகின்ற கொடுமை நடந்து வருகிறது. மேலும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களாக உள்ள அலி கார் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் தொடர்ந்து இடை யூறுகளை இந்துத்துவா அமைப்புகள் செய்து வருகின்றன.

அமைச்சர்கள்மீது
வழக்கு


அய்தராபாத் ரோகித் வெமுலா உயிரிழப்புக்கு காரணமானவர்களாக பாஜகவின் அமைச்சர்களே இருந் துள்ளனர் என்பதும், அவர்கள்மீதும் வழக்கு உள்ளது என்பதும் சுட் டிக்காட்டப்பட வேண்டியதாக உள்ளது.

தேசவிரோத சட்டங்கள் என்கிற பெயரால், மாட்டிறைச்சியின் பெய ரால்தாழ்த்தப்பட்டவர்களை,சிறு பான்மை முசுலீம் மக்களை  சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பிலிருந்து இந்துத்துவாவுக்கு எதிராக செயல்படுபவர்களை அச் சுறுத்துவதும், இந்துத்துவா வெறியை ஊட்டி பகுத்தறிவாளர்களை அச் சுறுத்துவதுமாக இந்துத்துவாவாதிகள் இருந்து வருகின்றனர். ரோகித் வெமுலா, முகம்மது அக்லக், தபோல்கர், கல்புர்கி, பன்சாரே என பலரையும் பல்வேறு காரணங்களைக் கொண்டு இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை படுகொலை செய்வது, கன்னையாகுமார் உள்ளிட்ட ஜேஎன்யூ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்மீது தேச விரோத சட்டங்களின்படி வழக்கு தொடுத்து சிறையில் அடைப்பது என்பது உள்ளிட்ட மோசமான செயல் பாடுகள் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தீவிரமாகி உள்ளன.

இந்நிலையில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்துத்துவாஅமைப்பானஏபிவிபி அதிகாரஆணவத்துடன்மற்றமாண வர்களை ஒடுக்கிட முயன்று மாண வர்களையும், பேராசிரியர்களையும் சிறையில்அடைக்கும்நிலையை ஏற் படுத்தியதால், வெகுண்டெழுந்த மாணவர்களிடையே இத்தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பல் கலைக்கழகத்தின் மாணவர் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கான தேர்தலில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் 35 மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.

அகில இந்திய மாணவர்கூட்ட மைப்பின்சார்பில்போட்டியிட்டகன்னையாகுமார்கடந்தமுறை பல்கலைக் கழகத்தின் மாணவர்  அமைப் பின் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் தற்போதும் போட்டியிடுகிறார்.

ஜியோ மோடி

மாணவர் தேர்தலில் உங்கள் வாக்கு Ôஜியோ மோடிÕ அணிக்கா? கபாலி அணிக்கா? என்கிற முழக்கங்கள் ஜேஎன்யூ வளாகத்தில் ஒலிக்கின்றன.

ஆட்சி அதிகார ஆணவத்துடன் உள்ள இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். ஏபிவி அணிக்கா?

இந்துத்துவாவுக்குஎதிரானஅம் பேத்கரிய அமைப்புகளின் மாண வர்களைக் கொண்ட அணிக்கா? என்கிற நிலையில் தேர்தல் எப்போதுமில்லாத வகையில் தற்போதுகொள்கையை மய்யப்படுத்திய தேர்தலாக  டில்லி ஜவ கர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தல் நடைபெறுகிறது.

அம்பேத்கர் வழியில்
கபாலி அணி!

மாணவர்தலைவர்பதவிக்குபோட் டியிடுபவரான பீர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கத்தின் வேட் பாளர் சோன்பிம்பிள் ராகுல் புனராம்  கூறும்போது, ரஜினி நடித்து வெளியான திரைப்படமான கபாலியைக் குறிப் பிட்டு,தாழ்த்தப்பட்டவர்களின்தலை வரான அம்பேத்கர் வழியில் உள்ள கபாலி அணியே இம்முறை வெல்லும். நாடுமுழுவதும் அம்பேத்கர் அலை வீசிக்கொண்டிருக்கிறதுஎன்றுமாண வர்களிடையே பேசும்போது குறிப் பிட்டார்.

அகிலஇந்தியமாணவர்சங்கம் மற்றும் இந்திய மாணவர் கூட்ட மைப்பின் சார்பில் மொகித் கே பாண்டே கூறும்போது,

“உனாவில் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது, என்னைச் சுடுங்கள் என்றார் மோடி. அவர் கூறியதை ரிலையன்ஸ் நிறுவனம் மிகுந்த அக் கறையுடன், மோடியை படமெடுத்து விளம்பரத்துக்காக செய்தித்தாள்களில் வெளியிட்டது. மோடி முதன்மையான வேலைக்காரனாக இருக்க வேண்டும் என்று கூறிவந்தார். தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதன்மையான மாடலாக இருக்கிறார். ஆகவேதான், அவரை Ôஜியோ மோடிÕ என்கிறோம்’’ என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ விளம்பரத்தைச் சுட்டிக்காட்டிக்காட்டினார்
மேலும்அவர்கூறும்போது,“தாழ்த் தப்பட்டவர்களுக்கு எதிராக தொடர்ச்சி யாக வன்முறை வெறியாட்டம் போட்டு வரும் பாஜகவின் மத்திய அரசு தொழிலதிபர்களுககு ஆதரவாகவும், ஏழை எளியவர்களுக்கு எதிராகவும் உள்ளது’’ என்றார்.

1969 இல் தொடக்கம்


‘ஜே.என்.யு.’ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் டில்லியில் 1969 ஆ-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெரும்பாலும், இடதுசாரிக் கொள்கை களையும் எண்ணங்களையும் இந்தப் பல்கலைக்கழகத்தில் எங்கு சென்றாலும் பார்க்கலாம். மாணவர்களின் பேச்சு, உடை, சுவரோவியங்கள் அனைத்திலும் ஒரு கொள்கைகளைப் பார்க்கலாம்.

இங்குள்ள மாணவ அரசியல் தனித் தன்மையுடையது.  மாணவரிடையே முற்றிலும் ஜனநாயக முறையில் அரசி யல், தேர்தல், கருத்து விவாதங்கள் நடைபெறும். இந்திய அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் - சமூகப் பொருளாதார நிகழ்வுகளைக் கவனித்து அதில் தங்களது பங்கேற்பினைத் தருவார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற அனைத்துத் தேசியக் கட்சி களின் மாணவர் அமைப்பும் இங்கு செயல்பட்டுவருகிறது.இந்தியக்கல்விக் கூடங்களிலேயே ஜே.என்.யு வித்தியாச மானது. ஆண் - பெண் சமத்துவத்தை இங்கு பெரிதும் காணலாம். மிகவும் முற்போக்குச் சிந்தனையுடைய பேராசிரி யர்கள், மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் இது.

ஏபிவிபிக்கு கிடைத்த ஒரேயொரு பதவி


மாணவர் சங்கத்தில், தலைவர் உட்பட நான்கு பதவிகள் உள்ளன. கடந்தகால வரலாற்றில் இடதுசாரி மாணவ அமைப்பினர் மட்டுமே இந்த நான்கு பதவிகளையும் வென்றுவந்தனர். 14 ஆண்டுகள் கழித்து சென்ற ஆண்டு தேர்தலில் ஆளும் பி.ஜே.பி-யின் மாணவ அமைப்பான அகில பாரதீய வித்யா பரிஷத் (ஏபிவிபி) அமைப்புக்கு  ஒரேயொரு பதவி கிட்டியது.

இந்தத் தேர்தலில் 51 கல்லூரியைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் வாக்களிக்கின்றனர்.இரண்டு நாட் களுக்கு முன் ஜே.என்.யு-வில் வேட்பா ளர்களுக்கான விவாதம் நடைபெற்றது. இதற்காக வளாகம் முழுவதும் திருவிழா கூட்டம்போல் காட்சி அளித்தது. இரவு 10 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவைத் தாண்டிச் சென்ற இந்த விவாதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வழக்கமான அரசியல்வாதிகள்போல் தனிமனித தாக்குதல்கள் இல்லாமல் கருத்துரீதியாக வேட்பாளர்கள் தங்களது விவாதங்கள்மூலம் மோதிக்கொண்டனர். ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் மோஹித் மற்றும் பீர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கத்தின் வேட்பாளர்ராம்ஆகியோருக்குமாண வரிடையே பெரும் வரவேற்பு கிடைத் தது.

மதவாதச் சக்திகளை துரத்துவோம்!


மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எப்.அய் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறுவார்கள். ஆனால், இந்த முறை பிப்ரவரி மாதம் நடைபெற்ற சம்பவத்துக்குப் பிறகு இடதுசாரி மாணவ அமைப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து நான்கு பதவிகளுக்கான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இதுபற்றி ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் மோஹித், ‘‘மதவாதச் சக்திகளை ஜே.என்.யு-.வி லிருந்து துரத்த நாங்கள் (இடதுசாரிகள்) ஒன்று சேர்ந்துள்ளோம்’’ என்றார்.

ஏற்கெனவே பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக உள்ளவரான கன்னையகுமார் இந்த முறையும் போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார்.

பீர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கத்தின் (Birsa Ambedkar Phule Students’ Association-BAPSA)
வேட்பாளராக சோன் பிம்பிள் ராகுல் புனராம் போட் டியில் உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏபிவிபியின் சார்பில் மாணவி ஜானவி ஓஹ்ஜா போட்டியிடுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் உள்ள இந்துத்துவா அமைப்பான ஏபிவிபி ஒரு நிலையிலும், அம்பேத்கர் வழியில்  பீர்சா அம்பேத்கர் பூலே மாணவர் சங்கம் ஒரு நிலையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பு ஒரு நிலையிலும் போட்டியில் இருந்த போதிலும், முதன்மையான போட்டியாக இந்துத்துவா ஆதரவா? எதிர்ப்பா? என்பதுதான் மாணவர்களிடையே எழுந் துள்ளது.

12 ஆம் தேதி
தேர்தல் முடிவு

டில்லி பல்கலைக்கழகத்தில் 51 கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 1,23,241 மாணவர்களும், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுமார் 9 ஆயிரம் மாணவர்களும் இத் தேர்தலில் வாக்களித்தனர்.

9.9.2016 காலை 9 மணிக்குத் தொடங் கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிவரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

டில்லிபல்கலைக்கழகத்தின் தேர்தல் முடிவு இன்று (10.9.2016) வெளியாகிறது. டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தேர்தல் முடிவு 12.9.2016 அன்று வெளியாகிறது. தேர்தல்முடிவுஇந்துத்துவாவை முறி யடிப்பதாகவே இருக்கும் என்று மாணவர் வட்டாரத்தில் உறுதிபடக் கூறப்படுகிறது. விடுதலை.காம்

கருத்துகள் இல்லை: