புதன், 14 செப்டம்பர், 2016

இளம்பெண் வெட்டி கொலை .. ஒரு தலைக்காதல்... கோவையில் பயங்கரம்

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் - சாரதா
தம்பதியினர். இவர்களுக்கு 21 வயதில் தன்யா என்ற மகள் இருந்தார். தன்யாவுக்கு கடந்த மாதம் அன்னூர் அருகில் உள்ள நவபாரத் என்ற பள்ளியில் பணியாற்றி வரும் இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் புதன்கிழமை காலை மணமக்கள் இருவரும் சென்றுள்ளனர். அங்கு ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாலை தன்யா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து தன்யாவின் உடலை மீட்டதுடன், கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷகில் என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் தன்யா வீட்டருகே அன்னுர் தென்னம்பாளையம் ரோடு, ஜி.கே.எஸ். பில்டிங் பின்புறம் குடியிருந்து வருகிறார். இவர் தன்யாவை ஒருதலையாக விரும்பியுள்ளார்.
இந்தநிலையில் தன்யாவுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்துள்ளார். ஓணம் பண்டிகையொட்டி இவரும் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது காலையில் திருமணமாக உள்ள இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டதை நேரில் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷகில், தன்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டப்படி தன்யா வீட்டின் பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார் என தெரிய வந்துள்ளது. தப்பியோடிய ஷகிலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். -அருள்குமார்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: