விகடன்.காம் :காங்கிரஸ் பாரம்பரியத்திற்கு
சம்பந்தமில்லாத திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக
நியமிக்கப்பட்டிருக்கிறார். ' இளங்கோவனின் எதிர்ப்பையும் மீறி
திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன'
என்கின்றனர் சத்யமூர்த்தி பவன் வட்டாரத்தில்.
அறுபது நாட்களுக்கும் மேலாக தலைவர் இல்லாமல் தத்தளித்து வந்த >தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் கிடைத்துவிட்டார்
.
வயதிலும் அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான திருநாவுக்கரசருக்கு, தலைவர்
பதவி அளிக்கப்பட்டுள்ளது. " பெரும்பாலான காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்
ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்களாக உள்ளனர். புதிய தலைவர் நியமனத்தில் அவர்கள்
அனைவரும் அதிருப்தியோடு உள்ளனர்" என்கிறார் காங்கிரஸ் தலைவர் ஒருவர். அவர்
நம்மிடம், " நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, தமிழ்நாட்டில்
காங்கிரஸ் என்ற கட்சி இருப்பதையே மக்கள் மறந்து போனார்கள். ஈ.வி.கே.எஸ்
வந்த பிறகுதான், தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதுதம்பி ராகுலு நல்லா அரசியல் நடத்தும்னு நான் அப்பவே சொல்லல?
பா.ம.க, வி.சி.க, த.மா.கா, ம.தி.மு.க, தே.மு.தி.க, இடதுசாரிகள் ஆகியோர் இல்லாத சட்டசபையில், எட்டு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்ததற்குக் காரணமே இளங்கோவனின் செயல்பாடுகள்தான். ஆனால், தலைமையின் கவனத்திற்கு சிலர் தவறான தகவல்களை அளித்துவிட்டனர். நேரடியாகவே, இளங்கோவனை அழைத்து கண்டித்தார் ராகுல். இதுபற்றி சோனியாவிடம் விளக்கம் அளிப்பதற்காக, அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதற்கு மேலும் பதவியில் நீடிக்கக் கூடாது என்றுதான் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
இதையடுத்து, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பலரும் போட்டியில் இருந்தனர். ' ஒருவேளை திருநாவுக்கரசர் நியமிக்கப்படலாம்' என்றரீதியில் தகவல் வந்ததும், சோனியா கவனத்திற்கு விரிவான கடிதம் ஒன்றையும் அனுப்பினார். அதில், ' ' திருநாவுக்கரசர் பல கட்சிகளில் இருந்து வந்தவர். பா.ஜ.கவில் பல பதவிகளை அனுபவித்தவர். காங்கிரஸ் தொண்டர்களின் சூழலுக்கு அவர் பொருந்த மாட்டார். உண்மையான காங்கிரஸ் கட்சியினர் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என விவரித்தவர், ' அகில இந்தியப் பதவிக்கு சிதம்பரம் பொருத்தமானவர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கீழ்நிலையில் இறங்கி வேலை செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக பீட்டர் அல்போன்ஸ்க்கு பதவி கொடுக்கலாம்' எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையையும் நிராகரித்துவிட்டார் ராகுல்காந்தி. இதன்பின்னரும், ' 41 மாவட்ட தலைவர்கள் இளங்கோவன் பக்கம் உள்ளனர். அவர்கள் எந்த ஒத்துழைப்பையும் புதிய தலைவருக்கு அளிக்க மாட்டார்கள்' எனவும் சொன்னார்கள். இப்போது இளங்கோவனின் எதிர்ப்பையும் மீறி, திருநாவுக்கரசருக்கே பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் போகப் போகத்தான் தெரியும்" என்றார் விரிவாக.
" புதிய தலைவரை நியமிப்பதற்காக முதலில் ஒன்பது பேரிடம் நேர்காணல் நடத்தினார் ராகுல் காந்தி. ' தமிழ்நாட்டின் சூழல் எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்க முடியும்? மக்கள் மனநிலை என்ன?' என்பது பற்றித்தான் பல கேள்விகளைக் கேட்டார். அதன்பிறகும், நான்கு பேரிடம் நேர்காணல் நடத்தினார். ' தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர்?' என்ற கேள்விக்கு பலரும் விதவிதமான பதில்களைத் தந்தார்கள். அவை அனைத்துமே கோஷ்டியை மையமாக வைத்திருந்தன. திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு வந்தபோதும், ' காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்கள் எல்லாம், கட்சியை வளர்த்துவிட்டார்களா?' எனக் கோபப்பட்டார் ராகுல். அவருடைய முந்தைய புரஃபைல், அரசியல் களத்தில் கையாண்ட அணுகுமுறைகள் போன்றவற்றை கவனித்து வந்திருக்கிறார். ' தமிழ்நாட்டு அரசியலில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவார்' என்று நம்பித்தான் அவரிடம் பொறுப்பு அளித்திருக்கிறார் ராகுல். இதனை இங்குள்ள சில தலைவர்கள் ரசிக்கவில்லை " என்கிறார் சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி ஒருவர்.-ஆ.விஜயானந்த்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக