இதுதொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து
பதிவசெய்துள்ள நதியா, இனப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு புதிய வாழை்வை அமைத்துக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி மனித கடத்தலை இல்லாது ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற
போரின் போது நதியாவின் கண் முன்னர் அவரது தாய் மற்றும் சகோதரர் ஐ.எஸ்.
தீவிரவாதிகாளால் கொல்லப்பட்டனர். பிறகு நதியாவும் தனது 19 ஆவது வயதில்
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக ஆக்கப்பட்டார்.
நதியா பலமுறை தப்பிக்க முயன்றும் அவரால்
தப்பிக்க இயலவில்லை. ஒருமுறை 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் அவரை கூட்டு பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தினர். இதனால் சுயநினைவை இழந்தார். ( அது சரி நம்ப ரஜினி பொண்ணு இதுவரை மனிதகுலத்துக்கு என்ன சேவை பண்ணிச்சு? அதுவும் இப்போ ஐ நா தூதராமே? அய்நாவையே காசு கொடுத்து அவா வாங்கிட்டாளா?)
இந்நிலையில் ஒருவழியாக தப்பித்த நதியா ஜேர்மனிக்கு சென்றதன் பிறகு அவர் வைத்தியம் பெற்றுக்கொண்ட நிலையில் குணமடைந்தார்.
இவ்வாறு பல இன்னல்களை அனுபவித்த நதியா
இன்று ஐ.நா.வின் மனிதகடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக
நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் இலக்கியைன்போ.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக